Home
Computer

லெனோவாவின் புதிய கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்!

By Karthikeyan
லெனோவாவின் புதிய கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்!

படிக்கும் மாணவர்களுக்காக லெனோவா நிறுவனம் சமீபத்தில் புதிய லேப்டாப்புகள் மற்றும் மேசைக் கணினிகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய சாதனங்களுக்கு லெனோவா கிளாஸ்மேட்+ மற்றும் திங்க்சென்டர் டைனி என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

திங்க்சென்டர் டைனி என்ற மேசைக் கணினி குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும். குறிப்பாக இந்த கணினி மாணவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த மேசைக் கணினி பல மாடல்களில் வருகிறது. இதில் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளுக்கு ஏற்ப இதன் விலையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த மேசைக் கணினி பல்வேறு புதிய தொழில் நுட்பங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உறுதியான கணினியாகும். அதோடு வெளிப்புறக் காரணங்களால் எளிதில் இந்தக் கணினி பாதிப்பும் அடையாது.

இந்த மேசைக் கணினியின் பேட்டரி பேக்கப் 10 மணி நேரம் ஆகும். இந்த கணினி மாணவர்களுக்காகவே மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிலைய நிர்வாகிகளும் பயன்படுத்தலாம். இந்த கணினியில் இன்டல் ப்ராசஸர் உள்ளது.

அடுத்ததாக லெனோவா க்ளாஸ்மேட்+ லேப்டாப் திங்க்சென்டர் டைனி கணினியை விட நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கிறது. இன்டல் ப்ராசஸரில் வரும் இந்த லேப்டாப் இன்டல் லேர்னிங் சீரிஸ் சாப்ட்வேர் சூட்டையும் கொண்டருக்கிறது. இந்த சாப்ட்வேர், இ-ரீடர், டிஜிட்டல் ரைட்டிங் மற்றும் வெப் கேமரா போன்றவற்றை சப்போர்ட் செய்யும். இந்த லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

லெனோவாவின் இந்த புதிய கணினி மற்றும் லேப்டாப் போன்றவை மாணவர்களுக்கு அசூர வளர்ச்சியைக் கொடுக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X