ஆன்ட்ராய்டு வசதிகளுடன் புதிய லெனோவா டேப்லெட்!

லெனோவா நிறுவனம் இப்போது லெனோவா லீ பேட் எஸ்2010 என்ற புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்குகிறது.
இந்த லீபேட் டேப்லெட் மகத்தான சில சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக இதன் ப்ராசஸர் க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் எபிக்யு8060 ப்ராசஸர் ஆகும். இந்த ப்ராசஸரின் கடிகார வேகம் 1500 எம்ஹெர்ட்ஸ் ஆகும்.
இந்த லேப்டப் 1ஜிபி சிஸ்டம் மெமரியையும் 15 ஜிபி சேமிப்பு மெமரியையும் கொண்டுள்ளது. இதன் மெமரியை மைக்ரோஎஸ்டி, மைக்ரோஎஸ்டிஎச்சி, அல்லது ட்ரான்ஸ்ப்ளாஷ் மெமரி கார்டுகள் போன்றவற்றின் மூலம் விரிவுபடுத்த முடியும்.
இந்த லீபேட் டேப்லெட்டின் திரை 10.1 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இது அக்சிலரோமீட்டர் வசதியையும் கொண்டுள்ளது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். மேலும் இது 720பி வீடியோ ரிசலூசனையும் சப்போர்ட் செய்கிறது. இதன் முக்கிய கேமரா 8 மெகா பிக்சல்களைக் கொண்டது. இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் ப்ளாஷ் ஆகிய வசதிகளும் உண்டு. இதன் முகப்பு கேமரா 1.3 மெகா பிக்சல்களைக் கொண்டிருக்கிறது.
மின் திறனிற்காக இந்த லீ பேட் டேப்லெட் 7560எம்எஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் உண்டு. அதோடு இந்த டேப்லெட்டில் ஜிபிஆர்எஸ், இடிஜிஇ, எச்டிபிஎ போன்ற வசதிகளையும் அனுபவக்கலாம்.
இணைப்பு வசதிக்காக மைக்ரோ யுஎஸ்பி கனெக்டருடன் கூடிய யுஎஸ்பி 2.0 போர்ட், 2.1 ப்ளூடூத், 802.11 பி/ஜி/என் வயர்லஸ் லேன் ஆகிய இணைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்த டேப்லெட். அதே பேல் இந்த லேப்டாப்பின் எ-ஜிபிஎஸ் சப்போர்ட்டும் உள்ளது. ஏற்கனவே கூறியது போல் இதன் இயங்கு தளம் கூகுள் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் 3.2 ஆகும். இதன் மொத்த பரப்பு 265.9 மிமீ x 183.4 மிமீ x 9.9 மிமீ ஆகும். இதன் மொத்த எடை 670 கிராம் மட்டுமே.
இந்த லீ பேட் டேப்லெட் மிகவும் எளிமையான டிவைஸ் ஆகும். இதன் முன்புறம் முகப்பு கேமராவும் பெரிய திரையும் உள்ளன. இது பளபளக்கும் கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் எடை குறைவாக இருப்பதால் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும்.
இந்த லீ பேட் டேப்லெட் ஜிஎஸ்எம் ப்ரீக்வன்சிகள் மற்றும் யுஎம்டிஎஸ் 2100 நெர்வொர்க்குடன் கூடிய வாய்ஸ் சப்போர்ட்டை வழங்குகிறது. இதன் திரை மல்டி டச் வசதி கொண்டது. இதன் ப்ராசஸரும் இந்த லேப்டேப்புக்கு தாறுமாறான வேகத்தை வழங்குகிறது. மேலும் இதில் வீடியோ கேம் விளையாடுவது ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
இதில் எல்லாவிதமான இணைப்பு வசதிகளும் உள்ளதால் தகவல் பரிமாற்றத்திற்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. இந்த லிபேட் டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நடுத்தர விலையில் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications