2 புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்திய லெனோவா!

By Super
|

2 புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்திய லெனோவா!
தரமான படைப்புகளின் மூலம் சில நிறுவனங்கள் மக்களிடையே நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. அந்த வரிசையில் கம்ப்யூட்டர் உலகில் முன்னணி நிறுவனமாக திகழும் லெனோவா தற்போது புதிதாக 2 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

வர்த்தக ரீதியில் பயன்படும் வகையில் இந்த இரண்டு கம்ப்யூட்டர்களும் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கின்றன. லெனோவோ திங்க்சென்டர் எட்ஜ் 71-இசட், லெனோவோ திங்க்சென்டர் எட்ஜ் 91-இசட் என்ற பெயர்களில் இவை மார்க்கெட்டுக்கு வந்துள்ளன.

லெனோவோ திங்க்சென்டர் எட்ஜ் 71-இசட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இன்டல்-கோர் ஐ-3-2100 பிராசஸரை கொண்டுள்ளது. இதில் ஜென்யூன் விண்டோஸ் 7 பிரஃபஷனல் 32 தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டரில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கிராஃபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

லெனோவோ திங்க்சென்டர் எட்ஜ் 91-இசட் கம்ப்யூட்டரில், இரண்டாவது தலைமுறை, இன்டல் கோர் ஐ-7 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 தொழில் நுட்பத்துடன், 64-பிட் பிராசஸரும் இருப்பதால் சிறந்த வசதிகளை வழங்கும்.

திங்க்சென்டர் எட்ஜ் 71-இசட் டெஸ்க்டாப் 20.0 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். இதனால் 1600 x 900 திரை துல்லியத்தையும் பெறலாம். திங்க்சென்டர் எட்ஜ் 91-இசட் கம்ப்யூட்டரில் 21.5 இஞ்ச் எல்இடி திரை வழங்கப்பட்டுள்ளது.

திங்க்சென்டர் எட்ஜ் 71-இசட் மாடலில், வாடிக்கையாளர்களின் உபயோகத்திற்காக 500ஜிபி 7200 ஹார்டு டிரைவ் உள்ளது. இந்த டிவைசில் 8ஜிபி வரை டிடிஆர்-3 ரேம் உள்ளது.

லெனோவோ திங்க்சென்டர் எட்ஜ் 91 இசட் கம்ப்யூட்டரில் 6-இன்1 கார்டு ரீட்ர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா வசதியினையும் வழங்கும்.

அதி நவீன தொழில் நுட்பத்தில் கலக்கும் இந்த இரண்டு டெஸ்க்டாப்களும் லெனோவோ ஸ்டோர்களில் கிடைக்கும். திங்க்சென்டர் எட்ஜ் 71-இசட் ரூ.28,000 வலையிலும், லெனோவோ திங்க்சென்டர் எட்ஜ் 91-இசட் ரூ.45,000 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X