Home
Computer

அசுர சக்தியுடன் லெனோவாவின் புதிய லேப்டாப்!

By Karthikeyan
அசுர சக்தியுடன் லெனோவாவின் புதிய லேப்டாப்!

கேமிங் வசதிகளை சப்போர்ட் செய்வதற்காக பல நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் நோட்புக்குகளை அதிக சக்தி கொண்ட அளவில் உருவாக்குகின்றனர். குறிப்பாக இந்த டிவைஸ்களின் ரேம், ப்ராசஸர்கள் மற்றும் க்ராபிக்ஸ் அக்சிலரிங் யூனிட்டுகள் போன்றவை அதிக செயல் திறனுடன் இருக்கும்.

அந்த வகையில் தற்போது லெனோவா நிறுவனம் ஒரு அசுர சக்தி கொண்ட நோட்புக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கின் பெயர் ஐடியாபேட் ஒய்470பி ஆகும். இந்த நோட்புக் வெளி வருவதற்கு முன்பாகவே ஏராளமான ஆர்டர்கள் குவிந்துவிட்டன. இந்த புதிய ஒய்470பி நோட்புக் பழைய ஒய்470 நோட்புக்கிற்கு அடுத்து வந்துள்ளது.

இந்த ஒய்470பி நோட்புக்கின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 14 இன்ச் அளவில் எச்டி வசதி கொண்ட அகல திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 1366 x 768 ஆகும். கேமராவைப் பொருத்த மட்டில் இந்த நோட்புக் வீடியோ ரிக்கார்டிங் வசதி கொண்ட 2 மெகா பிக்சல் வெப்காமைக் கொண்டுள்ளது.

அதுபோல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த நோட்புக் 8ஜிபி டிடிஆர்3 ரேமையும் அதுபோல் 750 ஜிபி (5400 ஆர்பிஎம்) எச்எச்டி அல்லது 1 டிபி (தேவைப்பட்டால்)யைக் கொண்டுள்ளது. தகவல்களைக் கையாள டபுள்யுலேன் வைபை 802.11 பி/ஜி/என், இடிஆருடன் கூடிய ப்ளூடூத் வி2.1, யுஎஸ்பி 3.0 மற்றும் எச்டிஎம்ஐ அவுட் போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இந்த நோட்புக் வழங்குகிறது.

மின் திறனிற்காக இந்த நோட்புக் 6 செல் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 4 - 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த நோட்புக்கில் 6 இன் 1 கார்ட் ரீடரும் உண்டு. மேலும் இந்த நோட்புக் ப்ரீமியம் ஜேபிஎல் ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இதன் ஒலி அமைப்பும் மிக அருமையாக இருக்கும்.

மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது இந்த ஒய்470பி நோட்புக் ஜிகாபிட் எர்த்நெட் போர்ட் மற்றும் ப்ளூரே ட்ரைவையும் கொண்டிருக்கின்றது. இதன் எடை 4.9 பவுண்டுகள் மட்டுமே. மேலும் இந்த நோட்புக் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் சிபியு இன்டல் கோர் ஐ7 2670க்யுஎம் ப்ராசஸர் (2.2 ஜிஹெர்ட்ஸ், 6 எம்பி கேச்) மற்றும் ஜிபியு எஎம்டி ரேடியோன் எச்டி 7690 மற்றும் 1 ஜிபி மெமரியையும் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X