அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய லெனோவா கம்ப்யூட்டர்

இதன் திரை 20 இன்ச் கொண்டுள்ளதால் இது பார்ப்பதற்கு அட்டகாசமான தோரணையுடன் இருக்கும். இந்த திரை 1600 x 900 ரிசலூசன் கொண்டு எல்இடி பேக்லிட் வசதியையும் கொண்டுள்ளது.
சி325 டெஸ்க்டாப்பில் க்ராபிக்ஸ் வசதிகளும் மிக அருமையாக உள்ளன. இதில் இன்டக்ரேட்டட் எஎம்டி ரேடியோன் எச்டி 6320 க்ராபிக்ஸ் கார்டு உள்ளதால் வீடியோ கேம், க்ராபிக்ஸ் மற்றும் மீடியா வசதிகள் மிக அருமையாக இருக்கும்.
இதில் 8ஜிபி டிடிஆர்3 மெமரி உள்ளது. மேலும் இதன் ஹார்ட் டிஸ்க் 320ஜிபி மற்றும் 500ஜிபி கொண்டுள்ளது. மற்றும் இது 1டிபி ஹார்ட் ட்ரைவும் கொண்டுள்ளது.
லெனோவா சி325 இதர வசதிகளாக டிவிடி பர்னரை வழங்குகிறது. அதனால் டிவிடியை மிக எளிதாக பர்ன் செய்ய முடியும். இதன் யுஎஸ்பி போர்ட்டுகள் பல அளவுகளில் வருவதால் இதில் பல்வேறுபட்ட டிவைஸ்களை மிக எளிதாக இணைக்க முடியும்.
மேலும் இதில் வைபை 802.11 பி/ஜி/என் உள்ளதால் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதிலும் மேனேஜ் செய்வதிலும் எந்தவித பிரச்சினையும் இருக்காது. மேலும் இது 6 இன் 1 மெமரி கார்ட் ரீடர் கொண்டிருப்பதால் எல்லாவிதமான் மெமரி கார்டுகளையும் இதில் அனைத்து விதமான மெமரி கார்டுகளையும் பொருத்த முடியும்.
இதன் 0.3 மெகா பிக்ஸல் ரிசலூசன் கொண்ட வெப்காம் வீடியோ சேட்டிங்கிற்கு மிக பக்காவாக உள்ளது. அதுபோல் இதன் கேமராவும் சூப்பரான படங்களை வழங்கும்.
இந்த கனிணி விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளம் மற்றும் 64-பிட்டுடன் வருகிறது. இதன் இன்டக்ரேட்டட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் தரமான் இசையையும் வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர் எஸ்ஆர்எஸ் ஒலியை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இது ஐ டிஸ்டன்ஸ் சிஸ்டம் கொண்டு வருவதால் இதன் திரையை வெகு பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அது நமது கண்களைப் பாதிக்காது. இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.35,000 ஆகும்.


Click it and Unblock the Notifications