Home
Computer

ஜோடியாக களமிறக்கப்பட்ட லெனோவோ நோட்புக்குகள்!

By Super

ஜோடியாக களமிறக்கப்பட்ட லெனோவோ நோட்புக்குகள்!
லேப்டாப் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக திகழும் லெனோவோ நிறுவனம் எஸ்-300 மற்றும் எஸ்-400 நோட்புக் லேப்டாப்களை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

லெனோவோ நிறுவனத்தின் இந்த லெனோவோ ஐடியாபேட் நோட்புக்குகள், ஐ3/ஐ5 பிராசஸரினை கொண்டதாக இருக்கும். 500 ஜிபி வரை ஹார்டு டிஸ்க் ஸ்டோரேஜ் வசதியினை கொடுக்கும். மேலும் இந்த எஸ் வரிசை நோட்புக் லேப்டாப்களின் பிரத்தியேக தொழில் நுட்ப வசதி பற்றி இங்கே பார்க்கலாம்.

டைப் செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் அக்யூடைப் கீபோர்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 14 இஞ்ச் திரை 1366 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஏராளமான வசதிகளை வழங்கி வரும் இந்த லேப்டாப்பில் ஏஎம்டி ரேடான் 745-எம் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

சிறப்பான ஒலியை கேட்க இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த நோட்புக் லேப்டாப்பில் 4ஜிபி டிடிஆர்-3 மெமரி வசதியினை சிறப்பாக பயன்படுத்த முடியும். இதில் இன்னும் அதிகமான பேட்டரி ஆற்றலை சேமித்து வைத்து கொள்ளும் வகையில் சில வசதிகளும் வழங்கப்படும். இதனால் நீடித்து உழைக்கும் பேட்டரியினை சிறப்பாக பெறலாம்.

க்ரிம்சன் ரெட், சில்வர் க்ரே மற்றும் காட்டன் கேன்டி பிங்க் போன்ற கலக்லான நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஐடியாபேட் எஸ்-300 மற்று எஸ்-400 லேப்டாப்பின் விலை பற்றிய விவரங்களை பார்க்கலாம். லெனோவோ ஸ்டோர்களில் கிடைக்கும் இந்த எஸ்-300 லேப்டாப் ரூ. 31,990 விலையிலும், எஸ்-400 லேப்டாப் ரூ. 36,990

விலையிலும் கிடைக்க பெறும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X