லெனோவா எல்380 யோகா: தேவைக்கேற்ப கச்சிதமாக செயல்படும் ஒரு நோட்புக்.!

இந்த வரிசையில் இடம் பெறும் 13.3 இன்ச் அளவு கொண்ட விண்டோஸ் நோட்புக் கன்வர்டிபிள் ஆன திங்க்பேட் யோகா எல்380, ரூ.65 ஆயிரம் என்ற துவக்க விலையோடு வெளியாகி உள்ளது.

|

இந்திய சந்தையில் லெனோவா எல்380 யோகா ரூ.65 ஆயிரம் என்ற துவக்க விலை நிர்ணயத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தொழில்துறை ஆர்வலர்களுக்கான சிறந்த தீர்வாக அமையும் வகையில், லெனோவா நிறுவனத்தின் திங்க்பேட் யோகா வரிசையில், திங்க்பேட் எக்ஸ், டி மற்றும் எல் சீரிஸ் போன்ற நோட்புக்குகள் சமீபகாலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

லெனோவா எல்380 யோகா: தேவைக்கேற்ப கச்சிதமாக செயல்படும் ஒரு நோட்புக்.!

இந்த வரிசையில் இடம் பெறும் 13.3 இன்ச் அளவு கொண்ட விண்டோஸ் நோட்புக் கன்வர்டிபிள் ஆன திங்க்பேட் யோகா எல்380, ரூ.65 ஆயிரம் என்ற துவக்க விலையோடு வெளியாகி உள்ளது. இது கச்சிதமான மற்றும் சிறப்பான திங்க்பேட் நோட்புக் என்பதோடு, டெண்ட் முறை அல்லது ஒரு டேப்லெட் முறையில் இதை பயன்படுத்த முடியும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டமைப்பைப் (கன்ஃபிகரேஷன்) பொறுத்து, இதன் விலை ரூ.87 ஆயிரம் வரை உயரலாம் என்று தெரிகிறது. இது குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

  வடிவமைப்பு:

வடிவமைப்பு:

அலுமினியம் அலாய் மூலம் வடிவமைக்கப்பட்ட திங்க்பேட் யோகா எல்380-க்கு, ரப்பரால் ஆன பணிமுடிவு அளிக்கப்பட்டு, ஒரு பிரிமியம் உணர்வைப்பெற்றுள்ளது. இந்த நோட்புக்கின் எடை 1.56 கிலோ (துவக்க எடை) என்பதால், எங்கு வேண்டுமானாலும் எளிதாக தூக்கி செல்ல முடியும்.

இந்த எல்380-யை ஒரு தரமான நிறுவனத்தின் லேப்டாப்பைப் போல பயன்படுத்த முடியும். இதன் லிட்டை மடிப்பதன் மூலம் ஒரு விண்டோஸ் டேப்லெட் போல அல்லது யோகாவின் முழு வடிவமைப்பைப் பயன்படுத்தி விளக்கக்காட்சிகளை அளிக்க அல்லது ஸ்டேண்ட் அல்லது டெண்ட் முறையில் வைத்து திரைப்படங்களைப் பார்க்க பயன்படுத்தலாம். டெண்ட் முறையில் தொடுதிரை வசதியும் அளிக்கப்படுவதால், அலுவலகத்தில் அளிக்க வேண்டிய விளக்கக்காட்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

திங்க்பேட் எல் சீரிஸை பொறுத்த வரை, விலை நிர்ணயத்தில் லினோவா நிறுவனம் சில சமரசங்களில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடலாம். ஏனெனில் விலை உயர்ந்த யோகா வகைகளில் காணப்படும் கார்பன்-ஃபைபரில் உருவாக்கப்பட்ட சேஸிற்கு பதிலாக, தரமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் லிஃப்ட் என் லாக் கீபோர்டும், இதில் இல்லை.

டிஸ்ப்ளே:

டிஸ்ப்ளே:

இதில் ஒரு 13.3 இன்ச் ஐபிஎஸ் முழு ஹெச்டி திரை காணப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே 1920 x 1080 பிக்ஸல் பகுப்பாய்வைக் கொண்டு, தொடு உள்ளீடு வசதி அளிக்கிறது. உங்கள் விருப்பம் போல டிஸ்ப்ளே-யை வைத்து கொள்ள யோகா வடிவமைப்பு செயல்பாடு உதவுகிறது. டேப்லெட் முறை அல்லது வடிவமைப்பு விளக்கப்படங்களில் குறிப்பு எடுக்க, துல்லியமான மற்றும் கச்சிதமான கருவியாக 'ஆக்டிவ் பென் ப்ரோ' அளிக்கப்பட்டுள்ளது.

இதன் திரை மிருதுவாகவும் நிற வெளியீடு சிறப்பாகவும் உள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் நான்கு மூலைகளிலும் பெரிய பேஸில்கள் இருப்பது மட்டுமே ஒரு பிரச்சனையாகத் தெரிந்தாலும், தற்செயலான சேதங்களில் இருந்து இவை பாதுகாக்கின்றன.

 தட்டச்சு அனுபவம்:

தட்டச்சு அனுபவம்:

இதன் கீபோர்டின் நடுப்பகுதியில் உள்ள வழக்கமான சிவப்பு நப் மூலம் கர்சரின் சிறப்பான மற்றும் வேகமான அசைவுகளுக்கு ஏதுவாக உள்ளது. கடந்த காலங்களில் திங்க்பேட் பயன்படுத்தாமல் இருந்தால், அதை பயன்படுத்த துவக்கத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படும். ஆனால் அது பழகிவிட்டால், முந்தைய திங்க்பேட்டை விட, தட்டச்சு செய்ய இது அதிக எளிதாக இருக்கிறது. நீண்டநேர பயன்பாடுகளில் ஒரு கச்சிதமான தட்டச்சு அனுபவத்தை அளித்து, நாம் செய்யும் பிழைகளையும் தவறுகளையும் எளிதாக கண்டறிய முடிகிறது.

டிராக்பேட் பொறுத்த வரை, வலது மற்றும் இடது பக்க கிளிக் செய்வதற்கான பொத்தான்கள் இருப்பதோடு, உள்நுழைந்து பணியை விரைவில் துவங்கும் வகையில், கைரேகை கண்டறிதல் வசதி உள்ளது. இந்த நோட்புக்கில் உள்நுழைய, விண்டோஸ் ஹலோ ஃபேசியல் ரெக்கனேஷன் சாஃப்ட்வேரையும் பயன்படுத்த முடியும்.

  செயல்பாடு:

செயல்பாடு:

எனக்கு ஆய்வு செய்ய கிடைத்த எல்380-ல், எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த இன்டெல் ஐ5 செயலி உடன் 8ஜிபி ரேம் மற்றும் 500 பிசிஐஇ எஸ்எஸ்டி ஆகியவை இணைந்து செயலாற்றுகின்றன. இது 8வது தலைமுறையைச் சேர்ந்த இன்டெல் கோர் ஐ7 மற்றும் 32ஜிபி டிடிஆர்4 வரையிலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. கிராஃபிக்ஸ் பயன்பாட்டிற்கு, இன்டெல் யூஹெச்டி 620 அளிக்கப்படுகிறது. புகைப்பட திருத்தம், வேலை அடிப்படையிலான சிஎம்எஸ் மற்றும் தடுமாற்றம் இல்லாத வீடியோக்களின் இயக்கம் ஆகியவற்றை பெற முடிகிறது. யோகா எல்380-ல் ஹெட்போன்கள் இல்லாமல் ஆடியோ செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏனெனில் நன்றாக கேட்கும் வகையில், ஸ்பீக்கர்களின் அளவு அதிகமாக இல்லை. மற்றபடி, செயல்பாட்டில் எந்தொரு பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை.

பேட்டரி திறனைப் பொறுத்த வரை, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப 9 முதல் 10 மணிநேரம் தொடர்ந்து இந்த நோட்புக்கை பயன்படுத்தலாம்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
முடிவு

முடிவு

ஒரு எஃப்ஹெச்டி தொடுதிரையுடன் பல்வேறு முறைகளில் தேவைக்கேற்ப பயன்படுத்த கூடிய எல்380-யில், உயர்தர தட்டச்சு அனுபவத்தையும் நீண்டநேர பேட்டரி திறனையும் பெற முடிவதால், எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செயலாற்ற முடிகிறது.

திங்க்பேட் யோகா எல் சீரிஸ் விலை ரூ.65 ஆயிரத்தில் இருந்து துவங்குவதோடு, சுமூகமான லேப்டாப்பை காட்டிலும் மேலான அனுபவத்தை பெற விரும்பும் தொழில்துறையினர் மற்றும் எந்தொரு நபருக்கும், இது ஒரு சிறந்த விண்டோஸ் நோட்புக்காக அமையும். இதை ஒரு தரமான விண்டோஸ் பிசி ஆக மட்டும் நீங்கள் பயன்படுத்த விரும்பினால், ரூ.61 ஆயிரத்தை துவக்க விலையாக கொண்ட திங்க்பேட் எல்380-யைத் தேர்ந்தெடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Lenovo L380 Yoga Review Versatile 2 in 1 business Windows convertible ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X