பட்ஜெட் விலையில் புதிய லேப்டாப் அறிமுகம் : லெனோவோ அதிரடி.!!

By Meganathan
|

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஐடியாபேட் 100 எஸ் லேப்டாப் வகைககளை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி புதிய லேப்டாப் கருவிகளின் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஐஎஃப்ஏ

ஐஎஃப்ஏ

முன்னதாக ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேப்டாப் கருவியானது தற்சமயம் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

மாற்றம்

மாற்றம்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதை விட சில அம்சங்கள் இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரை

திரை

11.6 இன்ச் திரை மற்றும் 1366*768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட இந்த லேப்டாப் கருவியானது இன்டெல் பிராசஸர் மூலம் இயங்குகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

அதன்படி லெனோவோ ஐடியாபேட் 100எஸ் லேப்டாப் கருவியானது 1.83 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் ஆடம் Z3735F பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

32ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் சரியாக 1 கிலோ எடை கொண்டிருக்கின்றது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

0.3 எம்பி வெப்கேமரா, ஸ்டான்ர்டு கீபோர்டு, ப்ளூடூத் வி4.0, வை-பை 802.11 b/g/n, யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ, ஹெட்போன் ஜேக் மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி!

ரூ.6000க்கு 7 இன்ச் டேப்ளெட் அறிமுகம்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Lenovo introduces Windows 10 laptop at Rs 14,999 in India Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X