லெனோவாவின் அட்டகாசமான புதிய லேப்டாப்புகள்!

Posted By: Karthikeyan
லெனோவாவின் அட்டகாசமான புதிய லேப்டாப்புகள்!

லெனோவா தனது புதிய லேப்டாப்புகளை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த லேப்டாப்புகளுக்கு ஐடியாபேட் யு310 மற்றும் யு410 என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டும் அல்ட்ராபுக் வகையைச் சார்ந்தவை.

அடுத்ததாக லெனோவா ஐடியா சென்டர் எ720 என்ற ஒரு ஆல் இன் கணினியையும் களமிறக்கி இருக்கிறது. இந்த 3 சாதனங்களும் இந்திய மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு310 அல்ட்ராபுக் 13 இன்ச் டிஸ்ப்ளேயையும், யு410 அல்ட்ராபுக் 14 இன்ச் டிஸ்ப்ளேயையும் கொண்டுள்ளன. இந்த இரண்டு அல்ட்ராபுக்குகளும் குறைந்த எடையி்ல் அதாவது 2 கிலோவுக்குள் இருக்கின்றன.

யு310 லேப்டாப் டிஸ்ப்ளே இன்டல் ஜிஎம்எ 3000 எச்டி க்ராபிஸைக் கொண்டுள்ளது. அதே நேரத்தி்ல யு410 லேப்டாப் என்விடியா ஜிஇபோர்ஸ் 610எம் 1ஜிபி க்ராபிக்ஸைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு லேப்டாப்புகளுமே இன்டல் வயர்லஸ் டிஸ்ப்ளே டெக்னாலஜியைக் கொண்டுள்ளன.

மேலும் இந்த இரண்டு லேப்டாப்புகளும் ஆக்குவா ஊதா, செரி ப்ளாசஸம், க்ராபைட் க்ரே, ரூபி சிவப்பு, சாப்பையர் ஊதா மற்றும் ஸ்பியர்மின்ட் ஆகிய நிறங்களில் வருகின்றன. விலையைப் பொருத்தமட்டில் யு310 ரூ.49,990க்கும், யு410 ரூ.52,990க்கும் விற்கப்படுகின்றன.

லெனோவாவின் ஐடியா சென்டர் எ720 கணினி மல்டி டச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த கணினியில் இன்டல் கோர் ப்ராசஸர் மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் க்ராபிஸ் மற்றும் 1டிபி எச்டிடி மற்றும் 64ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு ஆகியவை உள்ளன. இந்த கணினி ரூ.89,990க்கு விற்கப்படுகிறது.

லெனோவாவின் இந்த புதிய தயாரிப்புகள் இந்திய மக்களை கவருமா என்று விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot