Home
Computer

புதிய லெனோவா லேப்டாப்.. வீடியோ கேமில் ஓர் புதிய அனுபவம்!

By Karthikeyan
புதிய லெனோவா லேப்டாப்.. வீடியோ கேமில் ஓர் புதிய அனுபவம்!

லெனோவா நிறுவனம் தனது புதிய ஐடியாபேட் ஒய்570ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த லேப்டாப் கேமிங் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இந்த லேப்டாப் அகலமான திரை, சூப்பரான அக்கு டைப்பில் அமைந்த கீபோர்டு போன்றவற்றை வழங்குகிறது.

இந்த ஐடியாபேட் சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது இந்த லேப்டாப் 15.6 இன்ச் அளவில் ஒரு எச்டி எல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடை 2.6 கிலோவாகும். மேலும் இந்த லேப்டாப் கருப்பு நிறத்தில் மிக அழகாக வருகிறது.

இந்த லெனோவா லேப்டாப் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இது இண்டல் கோர் ஐ5-2410 ப்ராசஸர் மற்றும் இண்டல் எச்எம்65 சிப்செட்டையும் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த கேமரா 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 2.0 எம்பி கேமராவைத் தாங்கி வருகிறது. மேலும் இந்த கேமரா வீடியோவையும் சப்போர்ட் செய்யும். இதன் ரேம் 4ஜிபி டிடிஆர்3 ஆகும். இந்த லேப்டாப்பின் சேமிப்பு 8ஜிபி ஆகும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப் ஜிகாபிட் எர்த்நெட் லேன், ப்ளூடூத் 2.1+ இடிஆர், யுஎஸ்பி x யுஎஸ்பி 2.0 போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 2ஜி சப்போர்ட் உண்டு.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த லேப்டாப்பில் ஆடியோ ப்ளேயர் மற்றும் வீடியோ ப்ளேயர் போன்றவை உண்டு. மேலும் இது உயர்தர ஆடியோ, இண்டர்னல் மைக் மற்றும் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. அதாவது இதில் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் உள்ளன. மின் திறனிற்காக இந்த லேப்டாப் 6 செல் லித்தியம் பேட்டரியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப்பில் சூப்பராக கேம் விளையாடலாம்.

இத்தனை அமர்க்களமான வசதிகளைக் கொண்ட இந்த லேப்டாப்பின் விலை ரூ.49000 ஆகும். மேலும் இந்த லேப்டாப் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X