Home
Computer

இன்டெல் வயர்லெஸ் டிஸ்ப்ளேவுடன் புதிய லெனோவா லேப்டாப்!

By Super

இன்டெல் வயர்லெஸ் டிஸ்ப்ளேவுடன் புதிய லெனோவா லேப்டாப்!
லெனோவா நிறுவனம் தனது ஐடியாபேட் யு300 லேப்டாப்பை மேம்படுத்தி தற்போது ஐடியாபேட் யு400 என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் ஏராளமான சிறப்பு வசதிகளைக் கொண்டது.

இந்த லெனோவா ஐடியாபேட் யு400 லேப்டாப் 14 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரை 1366 x 768 ரிசலூசனை கொண்டிருக்கிறது. இது 1.98 கிலோ எடை கொண்டது. இணைப்பு வசதிகளுக்காக எர்த்நெட், யுஎஸ்பி 2.0 மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளைக் கொண்டுள்ளது.

தரமான ஒலி அமைப்பிற்காக அருமையான 2 ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதில் இன்டெல் 2ஜி பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது . அதுபோல் இன்டக்ரேட்டட் டிஸ்க்ரீட் க்ராபிக்ஸ் கார்டும் இதில் உள்ளது. இந்த லேப்டாப் 6ஜிபி ரேம் வசதியை கொண்டிருக்கிறது.

இதன் ஹார்டு டிஸ்க் 750ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ளது. இந்த ஹார்டு டிஸ்கை விரிவுபடுத்தவும் முடியும். மின் திறனுக்காக 4 செல் 54 வாட்ஸ் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த லேப்டாப்புக்கு 7 மணி நேர பேக்கப்பை வழங்குகிறது. இந்த லேப்டாப்பின் தடிமன் 22.6 மிமீ ஆகும்.

மொத்தத்தில் லெனோவா ஐடியாபேட் யு400 மிகவும் எடை குறைந்த லேப்டாப் ஆகும். அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இது அலுமினிய தகடால் செய்யப்பட்டு அடர்த்தியான கிரே வண்ணத்தில் வருகிறது. இதன் டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

இந்த லேப்டாப் எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் ஆடியோ போர்ட்டுகளையும் கொண்டுள்ளது. இதன் கீபோர்டு மிகவும் மென்மையாக இருக்கிறது. அதனால் இதில் டைப் செய்வது பரவசத்தைக் கொடுக்கும். இதில் பிஞ்ச் சூம் வசதி உள்ளதால் க்ராபிக்ஸ் வேலை செய்வதற்கு இது உதவியாக இருக்கும்.

இந்த லேப்டாப் விடி அல்லது வயர்லஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இது 1080பி வீடியோவை மற்ற எச்டிடிவி அல்லது மற்ற மானிட்டர்களுக்கு அனுப்பும் திறன் கொண்டுள்ளது. மேலும் இதில் ஐ3, ஐ5 மற்றும் ஐ7 ஆகிய ப்ராசஸர்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாம். இதன் ரேமை 8ஜிபி வரையிலும் இதன் ஹார்டு டிஸ்கை 1டிபி வரையிலும் விரிவுபடுத்த முடியும். அதுபோல் இதில் 64 ஜிபி கொண்ட எஸ்எஸ்டி கார்டையும் இதில் இணைக்க முடியும். இந்த லெனோவா ஐடியாபேட் யு400ன் ரூ.40,000 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X