எதிர்பார்ப்பை தூண்டும் புதிய லெனோவா அல்ட்ராபுக்குகள்!

Posted By: Karthikeyan
எதிர்பார்ப்பை தூண்டும் புதிய லெனோவா அல்ட்ராபுக்குகள்!

இந்த ஆண்டு லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் லெனோவா நிறுவனம் தனது அல்ட்ராபுக் வரிசையில் 2 புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்தது. அந்த லேப்டாப்புகளுக்கு லெனோவா ஐடியாபேட் யு310 மற்றும் லெனோவா ஐடியாபேட் யு40 என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் சூப்பாரன தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகின்றன. இந்த டேப்லெடாப்புகளில் இன்டல் கோர் ப்ராசஸர்கள், 64ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் அல்லது 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் ஆப்சன், 13.3 இன்ச் டிஸ்ப்ளே, சிக்லெட் ஸ்டைலில் அமைந்த கீபோர்டு, வெப் கேமரா மற்றும் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும் பேட்டரி என இந்த லேப்பில் நவீன் அம்சங்களைப் பார்க்கலாம்.

இந்த 2 அல்ட்ராபுக்குகளும் மிகவும் அடக்கமானவை. இவை ரூபி சிவப்பு, சாப்பயர் ஊதா, க்ராபைட், ஆக்குவா ஊதா மற்றும் ஸ்பியர்மின்ட் என பல வண்ணங்களில் வந்து அசத்துகின்றன.

இந்த 2 லேப்டாப்புகளிடையே உள்ள ஒரு சிறய வேறுபாடு அவற்றின் எடை மற்றும் தடிமன் ஆகும். அதாவது லெனோவா யு310 18 மிமீ தடிமனையும், 1.7 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் யு410 டேப்லெட் 20.3 தடிமனையும், 1.9 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது.

க்ராபிக்ஸ் வசதிகளுக்கா இந்த லேப்டாப்புகள் என்விடியா க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டிருக்கின்றன.

இந்த அல்ட்ராபுக்குகளின் விலை ரூ.49000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்