வர்த்தகர்களுக்காக லெனோவா வழங்கும் லேப்டாப்!

Posted By: Staff
வர்த்தகர்களுக்காக லெனோவா வழங்கும் லேப்டாப்!
கணினி மற்றும் லேப்டாப்களை உயர்தரத்தில் வழங்கும் லெனோவா நிறுவனம் புதிய தொழில் நுட்பத்துடன் லெனோவா ஐடியாபேட் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்காகவே இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்டல் கோர் ஐ3-380யுஎம் மற்றும் ஐ5-470யுஎம்ப் ஆகிய 2 ப்ராசஸர்களைக் கொண்டு இந்த லேப்டாப் களம் இறங்குகிறது. அடுத்ததாக இது விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்குதளத்துடன் 64பிட் மைக்ரோப்ராசஸர் கொண்டு வருகிறது. மேலும், இண்டல் எச்டி க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கும்.

இதன் மெமரியை சேமிப்பைப் பார்த்தால் அது 4ஜிபி பிசி3-8500 டிடிஆர் எஸ்ஆர்எஎம் ஆகும். அந்த மெமரி 1066 மெகா ஹெர்ட்ஸை கொண்டுள்ளது. ஐடியாபேட் யு260 உயர் டெபினிசன் கொண்ட 12.5 இன்ச் கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது.

இது ஆண்டி க்ளேர் வசதி கொண்ட டிஸ்ப்ளே ஆகும். அதுபோல் இதில் உள்ள 0.3 மெகா பிக்சல் கேமரா 1366 x 768 பிக்சல் ரிசலூசனைக் கொண்டு இருக்கிறது. அதனால் வீடியோ சாட்டிங் செய்வது இதில் மிக அருமையாக இருக்கும். அடுத்ததாக மல்டி டச் கொண்ட டச்பேடையும் இது கொண்டிருக்கிறது.

இந்த லேப்டாப் 2 பட்டன் மல்டி டச் கொண்ட டச்பேடைக் கொண்டுள்ளது. இதன் ஹார்ட் டிஸ்க் 320ஜிபி சேமிப்பு திறனை கொண்டிருக்கிறது. இது இண்டல் வயர்லஸ் வைபை லிங் 1000 வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது 2.1 ப்ளூடூத் மற்றும் இடிஆர் வசதியையும் கொண்டு வருகிறது.

அடுத்ததாக இந்த லேப்டாப்பில் எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட் உள்ளதால் தரமான வீடியோவை இதில் பார்க்கலாம்.  இதில் 4 செல் லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

மேலும் இந்த லேப்டாப்பின் மொத்த எடையே 3.5 பவுண்டுகளாகும். இதன் மொத்த பரப்பு 12.5 x 8 x 0.9 இன்ச்களாகும்.இதில் ஸ்டீரியோ வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் இன்பில்டாக உள்ளது.

விலையைப் பொறுத்தமட்டில் லெனோவா ஐடியாபேட் யு260 இண்டல் கோர் ஐ3 – 380யுஎம் ப்ராசஸருடன் ரூ.40,000க்கும், அதே நேரத்தில் இண்டல் கோர் ஐ5 – 470யுஎம் ப்ராசஸருடன் ரூ.50,000க்கும் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot