Home
Computer

எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா புதிய லெனோவா ஐடியாபேட்?

By Karthikeyan
எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா புதிய லெனோவா ஐடியாபேட்?

வர்த்தகர்கள் மற்றும் மாணவர்களையும் மையப்படுத்தி வரும் லேப்டாப்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த வாரம் லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் அந்த குறையை நீக்கவும் வகையில் எல்லாவித மக்களையும் கவரும் விதமாக பலவித ஸ்டைல்களில் ஏராளமான லேப்டாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்பாக லெனோவா நிறுவனத்தின் வர்த்தக பகுதியில் ஏராளமான கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் லெனோவா ஐடியாபேட் எஸ்200 லேப்டாப் தனது தகுதிக்கேற்ற கவனத்தை பார்வையாளர்களிடமிருந்த பெறவில்லை. ஆனாலும் இந்த லேப்டாப் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஸ்டைலான டிவைஸ் ஆகும்.

குறிப்பாக இந்த லெனோவா ஐடியாபேட் எஸ்200 லேப்டாப் மாணவர்களின் சரியானத் தேர்வாக இருக்க முடியும். ஏனெனில் இந்த லேப்டாப் மிகவும் அடக்கமாக அதே நேரத்தில் எல்லா வகையான வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு நெட்புக்கைப் போல செயல்படும்.

இந்த ஐடியாபேட் லேப்டாப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது 11.6 இன்ச் அளவில் அகலமான எச்டி வசதி கொண்ட திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையில் பிக்சல் ரிசலூசன் 1366 x 768 ஆகும். கேமராவை எடுத்துக் கொண்டால் இந்த லேப்டாப் பில்ட் இன் மைக்குடன் கூடிய 0.3 மெகா பிக்சல் எச்டி வெப்காமைக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக சேமிப்பிற்காக இந்த லேப்டாப் 2ஜிபி டிடிஆர்3 மெமரியையும் அதே நேரத்தில் எஸ்எஸ்டி மூலம் 32ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்தக்கூடிய வசதியையும் இந்த லேப்டாப் வழங்குகிறது. அதுபோல் தகவல் தொடர்புகளுக்காக வைபை 802.11 பி/ஜி/என், எச்டிஎம்ஐ போர்ட், ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 போர்ட்டுகள் மேலும் ஆர்ஜே 45, ஹெட்போன் அவுட், மைக்ரோபோன் இன் மற்றும் ஜிகாபிட் லேன் போன்ற அத்தனை இணைப்பு வசதிகளையும் இந்த லேப்டாப் வழங்குகிறது.

மின் திறனிற்காக இந்த லேப்டாப் 6 செல் ஸ்டேன்டர்டு பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த ஐடியாபேட் லேப்டாப்பின் தடிமன் 20.7 மிமீ ஆகும். இதன் எடை 1.3 கிலோ மட்டுமே. அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

இந்த ஐடியாபேட் லேப்டாப் விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்குகிறது. அடுத்ததாக இந்த லேப்டாப் 1.86 ஜிஹெர்ட்ஸ் இன்டல் ஆட்டம் என்2800 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த லேப்டாப் காட்டன் கேன்டி பிங்க், கிரிம்சன் சிவப்பு, எலக்ட்ரிக் ஊதா, க்ராபைட் க்ரே மற்றும் பேர்ல் வெள்ளை போன்ற நிறங்களில் வந்து மிக அழகாக இருக்கிறது.

இந்த ஐடியாபேட் லேப்டாப்பின் சிறிய குறை என்னவென்றால் இதன் பேட்டரி 4 மணி நேர இயங்கு நேரத்தை மட்டுமே வழங்குகிறது. ஆனால் இந்த லேப்டாப் மிக வேகமாக பூட் ஆகிவிடும். இதன் மற்ற முக்கிய அம்சங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபோல் இதன் 2 ஜிபி டிடிஆர்3 ரேமும் சற்று குறைவானதே. ஏனெனில் மாணவர்களுக்கு இன்னும் அதிக சக்தி வாய்ந்த ரேம் தேவைப்படுகிறது.

இந்த ஐடியாபேட் டேப்லெட் ஒரு உயர்தர டிவைசாக இல்லாவிட்டாலும், மாணவர்களின் பொருளாதார நிலைமைக்கு ஏற்றார்போல வருகிறது. இதன் விலை மிக விரைவாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X