Home
Computer

இழந்த புகழை மீட்குமா இந்த புதிய நெட்புக்?

By Karthikeyan
 இழந்த புகழை மீட்குமா இந்த புதிய நெட்புக்?

அல்ட்ராபுக்குகளும் டேப்லெட்டுகளும் வந்த பிறகு நெட்புக்குகள் தங்களது புகழை இழந்துவிட்டன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இன்னும் தமது நெட்புக்குகளை வாடிக்கையாளர்கள் முன் சந்தைப்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் லெனோவா நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் இப்போது ஐடியாபேட் எஸ்110 நெட்புக் என்று புதிய நெட்புக்கைக் களமிறக்குகிறது.

இழந்து போன புகழை மீட்டெடுப்பது என்பது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் லெனோவா அந்த காரியத்தை துணிந்து மேற்கொள்கிறது. அதாவது தமது ஐடியாபேட் எஸ்110 நெட்புக்கை பிரபலப்படுத்த சில உத்திகளை கையாளப் போகிறது லெனோவா. அதாவது இந்த ஐடியாபேட் எஸ்110ல் இன்டலின் செடார் ட்ராயல் சிப்ஸ்களை பொருத்துகிறது.

இந்த ஐடியாபேட் நெட்புக்கின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இந்த நெட்புக் 16 மிமீ தடிமனுடன் 1.15 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது. மேலும் என்2600 செடார் ட்ரயல் சிப்பைக் கொண்டுள்ளது. இதன் ரேம் 1ஜிபி ஆகும். இதன் திரை 10.1 இன்ச் அளவு கொண்டு எச்டி வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் ஹார்ட் டிஸ்க் 320 ஜிபி அளவைக் கொண்டுள்ளது.

இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி 3.0 இணைப்பு மற்றும் 3ஜி இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 3ஜி ரேடியோ மற்றும் 720பி மெகாபிக்சல் எச்டி வெப்காம் உள்ளது. ஆனால் இவற்றை விரும்பினால் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் முழு அளவிலான சிக்லெட் கீபோர்டும் இந்த நெட்புக்கில் உண்டு. அதுபோல் லெனோவாவின் க்யுக் ஸ்டார்ட் இன்ஸ்டன்ட் ஆன் பியூச்சர் ஆகிய வசதிகளும் இந்த நெட்புக்கில் நாம் பார்க்க முடியும். அதோடு இந்த நெட்புக் விஜிஎ போர்ட் இணைப்பையும் வழங்குகிறது.

என்2600 செடார் ட்ரயல் சிப் ஆசஸ், சாம்சங் மற்றும் சில நிறுவனங்களின் டிவைஸ்களில் இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளது என வதந்தி வருகிறது. ஆனால் லெனோவா ஐடியா பேட் எஸ்110 சில அப்க்ரேடுகளுடன் வருகிறது. இந்த அப்க்ரேடுகள் இந்த புதிய நெட்புக்கிற்கு பிரபலத்தை ஏற்படுத்தும் என லெனோவா நம்புகிறது.

இந்த ஐடியாபேட் எஸ்110 நெட்புக் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. குறிப்பாக இது சிவப்பு, கருப்பு, ஊதா மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வருகிறது. மேலும் இது ஒரு போர்ட்டபுள் டிவைஸ் ஆகும். இந்த நெட்புக் ஜனவரியில் லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் மின்னனு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐடியாபேட் நெட்புக்கின் விலை ரூ.20,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X