லெனோவா கிளாஸ்மேட்.. மாணவர்களின் புதிய தோழன்!

Posted By: Karthikeyan
லெனோவா கிளாஸ்மேட்.. மாணவர்களின் புதிய தோழன்!

மாணவர்களுக்கான கல்வியையும் மற்றும் பொழுதுபோக்கையும் தரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கென்று தனியாக லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்கனவே வந்துவிட்டது. மிகவும் பிரபலமான ஒஎல்பிசி ஏற்கனவே குழந்தைகளுக்கு மலிவான விலையில் கணினிகளை அறிமுகப்படுத்தியது.

அந்த வரிசையில் இப்போது லெனோவா நிறுவனம் மாணவர்களுக்காக மல்டிமோட் வசதி கொண்ட புதிய மலிவு விலை லேப்டாப்பைகளமிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் லெனோவா தனது கல்விக்கான கணினியை அறிமுகப்படுத்தியது. அது பலரையும் கவர்ந்தது. அந்த புதிய டிவைசின் பெயர் க்ளாஸ்மேட்+ பிசி ஆகும். இந்த புதிய லேப்டாப் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும். மேலும் இதன் விலை மிகக் குறைவாக இருக்கும். அதுபோல் இதன் பேட்டரியும் நீண்ட நேர இயங்கு நேரத்தை வழங்கும்.

இந்த க்ளாஸ்மேட் லேப்டாப்பைப் பற்றி அதிகமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இதனுடைய முக்கிய சிறப்பு அம்சங்கள் கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டன. அதாவது இந்த க்ளாஸ்மேட் லேப்டாப்பின் சிபியு யூனிட்

இன்டல் என்2600 ஆட்டமைக் கொண்டிருக்கும். இதன் 10.1 இன்ச் ஆன்டி க்ளேர் திரை இந்த லேப்டாப்புக்கு அம்சமான அழகைக் கொடுக்கும். அதுபோல் இந்த திரை தொடு வசதி கொண்டது. அதுபோல் இதில் எச்டி வசதியும் உண்டு. மேலும் இந்த திரை மிகவும் பளிச்சென்று இருக்கும்.

அடுத்ததாக இந்த க்ளாஸ்மேட் லேப்டாப் 2ஜிபி கொண்ட டிடிஆர்3 ரேமைக் கொண்டு இருக்கிறது. சேமிப்பு வசதிக்காக இதன் ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் 320 ஜிபி கொண்டுள்ளது. அதோடு 32ஜிபி கொண்ட ஒரு சாலிட் ஸ்டேட் ட்ரைவும் துணையாக உள்ளது. இதன் மெமரி குறைவாக இருந்தாலும் இதன் எஸ்எஸ்டி ட்ரைவ் வேகமாக இருக்கும். இதன் 6 செல் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அது 10 மணி நேர இயங்கு நேரத்தை கொடுக்கும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த க்ளாஸ்மேட் லேப்டாப் விஜிஎ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டுகளை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் மிக உறுதியானது. அதுபோல் இதன் கீபோர்டு தண்ணீர் தடுப்பு வசதி கொண்டது. அதனால் இதில் தண்ணீர் பட்டாலும் இது எளிதாக பாதிப்பு அடைவதில்லை. மேலும் இந்த லேப்டாப் உறுதியான பேன்ல்களுடன் வருவதால் இது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறது. இந்த லெனோவா க்ளாஸ்மேட்+ பிசி மற்றும் க்ளாஸ்மேட்+ க்ளாம்ஷெல் மாடல்கள் விரைவில் கல்வி நிலையங்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot