Home
Computer

திங்பேட் வரிசை லேப்டாப்புகளை அப்டேட் செய்யும் லெனோவா!

By Karthikeyan
 திங்பேட் வரிசை லேப்டாப்புகளை அப்டேட் செய்யும் லெனோவா!

லெனோவா நிறுவனம் தனது திங்பேட் வரிசை லேப்டாப்புகளுக்கு இன்டலின் புதிய ஐ-கோர் ப்ராசஸர்களை அப்டேட் செய்ய இருக்கிறது. அதிலும் குறிப்பாக திங்பேட் எட்ஜ் எஸ்430, இ430/530 மற்றும் பி வரிசை லேப்டாப்புகள் ஆகிய லேப்டாப்புகளுக்கு இந்த அப்டேட்டைச் செய்ய இருக்கிறது. புதிய தலைமுறை இன்டல் கோர் ஐ- ப்ராசஸர்களுக்கு ஐவி ப்ரிட்ஜ் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

திங்பேட் எஸ்430 லேப்டாப் மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் இந்தவித மாற்று கருத்தும் இருக்காது. இந்த லேப்டாப்பின் தடிமன் 8 மிமீ ஆகும். மேலும் இதில் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் மிகவும் பார்வையாக இருக்கிறது.

இதன் டிஸ்ப்ளே 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு பளிச்சென்று இருக்கிறது. இதன் கஸ்டமைசேசன் வசதிகளைப் பார்த்தால் இது ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள், டிவிடி பர்னர்கள் மற்றும் க்ராபிக்ஸ் கார்டுகளில் வசதிக்குத் தகுந்தாற்போல் விரும்பிய வெர்சனைத் தேர்ந்தெடுக்க முடியும்.

இதில் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் இதில் ஆப்பிள் டிவைஸ்களில் இருக்கும் தன்டர்போல்ட் இன்டர்பேஸ் இதில் வருகிறது. இதன் விலை ரூ.40,000 ஆகும்.

திங்பேட் எட்ஜ் இ430 மற்றும் இ530 லேப்டாப்புகள் டிஸ்ப்ளே அளவுகளில் வேறுபடுகின்றன. அதாவது இ430 லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளேயும் இ530 டிஸ்ப்ளேயும் கொண்டிருக்கின்றன. இவற்றில் கஸ்டமைசேஷன் வசதியும் உண்டு. அதாவது ஐவி ப்ரிட்ஸ் ப்ராசஸர்கள் மற்றும் எஎம்டி பியூசன் ப்ராசஸர்கள், க்ராபிக்ஸ் கார்டுகள் மற்றும் டிஸ்க்ரீட் போன்றவற்றில் விருப்பானவற்ற வாடிக்கையாளர்கள் தேர்ந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு லேப்டாப்புகளின் ஹார்ட் டிஸ்க் 1டிபி அளவைக் கொண்டுள்ளன. எஸ்எஸ்டி கார்டு மூலம் இந்த அளவை விரிவுபடுத்த முடியும். இந்த லேப்டாப்புகள் பலவிதமான நிறங்களில் வருகிறது. இவற்றின் விலை ரூ.30,000லிருந்து இருக்கிறது.

லெனோவா பி வரிசை லேப்டாப் மலிவு விலையில் வருகின்றன. ஆனால் இது உறுதியான லேப்டாப் ஆகும். இதில் 14 இன்ச் அல்லது 15 இன்ச் டிஸ்ப்ளேயைத் தேர்ந்தெடுக்க முடியும். அதுபோல் இன்ட்ல் 3ஜி ஐவி ப்ரிட்ஜ் ப்ராசஸர்கள் அல்லது எஎம்டி பியூசன் அரித்மேட்டிக் ப்ராசஸிங் யூனிட் இவற்றில் நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்த பி வரிசே லேப்டாப்புகள் வரும் ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இதன் விலை ரூ.25,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X