லெனோவா இன் ஐஎஃப்ஏ 2017 : லெனோவா யோகா 920, யோகா 720 அறிமுகம்.!
லெனோவா யோகா 920 லேப்டாப் 15.5 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது,மேலும் டால்பி அட்மோஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஐஎஃப்ஏ 2017 பொறுத்தவரை லெனோவா யோகா 920, யோகா 720 அறிமுகப்படுத்தப்பட்டது, இவை சிறந்த செயல்திறன்களை கொண்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. லெனோவா எக்ஸ்ப்ளோரர் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட், மற்றும் அமேசான் எக்கோ போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற பல்வேறு பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த லெனோவா யோகா லேப்டாப் பொறுத்தவரை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும். ஆனால் இதன் விலை மிக அதிகமாக உள்ளது, விலைக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த லேப்டாப்களில் இடம்பெற்றுள்ளது.

லெனோவா யோகா 920:
லெனோவா யோகா 920 பொதுவாக 13.9-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் டச்ஸ்கீரின் இவற்றுள் அடக்கம், அதன்பின் (1920-1080) பிக்சல் இவற்றுள் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த லேப்டாப்.

எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் :
எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் கொண்டுள்ளது இந்த லெனோவா யோகா 920 லேப்டாப் 8ஜிபி டிடிஆர்4 ரேம் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த லேப்டாப். 1.37 கிலோ எடை கொண்டுள்ளதாக உள்ளது யோகா 920 லேப்டாப்.

15.5 மணி நேர பேட்டரி ஆயுள்:
இந்த லெனோவா யோகா 920 லேப்டாப் 15.5 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது,மேலும் டால்பி அட்மோஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்,2 யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

லெனோவா யோகா 720:
இந்த லெனோவா யோகா 720 பொறுத்தவரை 13 மற்றும் 15-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி டிடிஆர்4 ரேம் அமைப்பு இவற்றுள் அடக்கம், அதன்பின் விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த லேப்டாப்.

8 மணி நேர பேட்டரி ஆயுள்:
லெனோவா யோகா 720 லேப்டாப் 8 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டவையாக உள்ளது. அதன்பின் யுஎஸ்பி டைப்-சி 3.0 மற்றும் யுஎஸ்பி டைப்-ஏ 3.0 போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications