லெனோவோ அறிமுகப்படுத்தும் புதிய ரெட்ரோ தின்க்பேட் 700சி லேப்டாப்.!
லெனோவோ நிறுவனம் இப்போது புதிய ரெட்ரோ வடிவமைப்பு கொண்ட தின்க்பேட் 700சி என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
லெனோவோ நிறுவனம் இப்போது புதிய ரெட்ரோ வடிவமைப்பு கொண்ட தின்க்பேட் 700சி என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் லெனோவோ 25-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இந்த தின்க்பேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய லேப்டாப் சாதனத்தில் ரெட்ரோ வடிவமைப்பு, கிளாசிக் என்டர் கீ, ஸ்டேட்டஸ் எல்இடி, போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்பு ஆண்டுவிழா சிறப்பு எடிஷனை குறிக்கும் பிரான்டிங் மற்றும் பேக்கேஜிங் கொண்டிருக்கும். மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
தின்க்பேட் 700சி லேப்டாப் பொதுவாக 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் தொடுதிரை அம்சத்தைக் கொண்டுள்ளது, மேலும்இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு (1920-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த லேப்டாப் மாடலில் இன்டெல் கோர்i7-7500U CPU, Nvidia GeForce 940MX GPU, 16 ஜிபி ரேம், 512 ஜிபி SSD வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 ஜிபி ரேம்இ,512 ஜிபி ளுளுனு இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, தண்டர்போல்ட், ப்ளூடூத், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டூயல் மைக் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த தின்க்பேட் 700சி லேப்டாப்
வெளிவந்துள்ளது.

பேட்டரி:
13மணி நேரம் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது, வீடியோகேம் மற்றும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக
இருக்கும் இந்த லேப்டாப் மாடல். மேலும் 1.6 கிலே எடை கொண்டுள்ளது தின்க்பேட் 700சி லேப்டாப்.

விலை:
தின்க்பேட் 700சி லேப்டாப்-ன் இந்திய விலை மதிப்பு ரூ.1,23,600-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications