லெனோவாவின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

By Karthikeyan
|
லெனோவாவின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

வரும் ஏப்ரல் மாதம் லெனோவா நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்டு 4.0 ஐடியா டேப் டேப்லெட்டை களமிறக்க இருக்கிறது. இந்த புதிய லெனோவா 9.7 இன்ச் டேப்லெட் ஐடியாடேப் எஸ்2109 அல்லது எஸ்2109எ-எப் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த லெனோவா டேப்லெட் டூவல்கோர் ப்ராசஸரைக் கொண்டு 4:3 ஆஸ்பெக்ட் ரேசியோவைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் 4 ஸ்பீக்கர்கள் உண்டு. மேலும் ஒஎம்எபி சிப்பைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தில் இயங்குகிறது.

மேலும் இந்த டேப்லெட் வயர்லஸ் டிஐ டபுள்யுஎல்1281 சிப், வைபை மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த ஐடியாபேட் டேப்லெட் டூவல்கோர் சிபியுவைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதர அம்சங்களைப் பற்றி லெனோவா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

குறிப்பாக ஐபேட் தயாரிக்கும் நிறுவனமான பாக்ஸ்கான் இந்த புதிய டேப்லெட்டை தயாரித்திருக்கிறது. இந்த லெனோவா டேப்லெட் முதலில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிலி, ரஷ்யா, மெக்ஸிகோ, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் டர்க்மெனிஸ்டான் போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X