ரூ.8,000ல் லீடர் வழங்கும் 2 புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

By Karthikeyan
|
ரூ.8,000ல் லீடர் வழங்கும் 2 புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

அனைவாராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட லாஸ் வேகாஸ் நுகர்வோர் மின்னணு கண்காட்சி இப்போது விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியில் தமது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த பல முன்னனி நிறுவனங்கள் வந்திருக்கின்றன. அதுபோல் புதிய நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்து ஆவலுடன் இருக்கின்றன.

இந்த வருட கண்காட்சியின் முக்கிய சிறப்பு என்னவென்றால் டேப்லெட் பிசி துறையில் ஏராளமாக புதிய நிறுவனங்கள் களம் இறங்குகின்றன என்பதாகும். அவற்றின் ஒன்று லீட்ர் இன்டர்நேசனல் ஆகும். இந்த நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய இரண்டு மலிவு விலை டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவற்றின் பெயர்கள் முறையே இம்ப்ரசன் 10ஏ மற்றும் இம்ப்ரசன் 7ஏ ஆகும்.

இம்ப்ரசன் 10ஏ டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த டேப்லெட் ஐபிஎஸ் எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடு வசதி கொண்ட 9.7 இன்ச் அளவுள்ள டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதாவது மலிவு விலையில் கப்பாசிட்டிவ் தொடு திரை என்பது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகும். இதன் திரை 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இதன் ப்ராசஸர் என்விடியா டூவல் கோர் டேக்ரா 2 சிப் ஆகும்.

பின் பக்கமும் முன் பக்கமுமாக இந்த 10ஏ டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய கேமரா 2 மெகா பிக்சல் ஆகும். இந்த டேப்லெட் இந்த புதிய ஆண்டில் காலாண்டில் அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.15000மாக இருக்கும்.

அடுத்ததாக இம்ப்ரசன் 7ஏ டேப்லெட்டை எடுத்துக் கொண்டால் இது மிகவும் அடக்கமான மற்றும் மிகவும் மலிவு விலை டேப்லெட் ஆகும். இது 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே ஐபிஎஸ்-எல்சிடி வசதி கொண்டு 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இதன் சிஸ்டம் மெமரி 512 எம்பி ஆகும். இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளதால் இதன் மெமரியை அதிகரிக்க முடியும்.

மேலும் இந்த 7ஏ டேப்லெட்டில் ஒரு மினி எசிடிஎம்ஐ போர்ட் உள்ளதால் இதன் வீடியோவை மிக அகன்ற திரைகளில் பார்க்க முடியும். மேலும் இந்த டேப்லெட் மிக உறுதியான டிவைஸ் ஆகும். இதன் விலை ரூ.8,000 மட்டுமே. இந்த டேப்லெட்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சந்தைக்கு வர இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த டேப்லெட்டுக்கு பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X