Home
Computer

ரூ.6,000ல் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் லாவா!

By Super

ரூ.6,000ல் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் லாவா!
தற்போதைய காலத்தை 'ஆன்ட்ராய்டு காலம்' என்று அழைக்கலாம். ஏனெனில் கூகுளின் ஆன்ட்ராய்டு இப்போது எல்லா நிறுவனங்களின் டேப்லெட்டுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்கு தளம் இருந்தால் ஆன்ட்ராய்டு சந்தையிலிருந்து அதன் அப்ளிகேசன்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆனால் ஆன்ட்ராய்டு பல வசதிகளை கொண்டிருந்தாலும், இலவச அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்தாலும், ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அதன் விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலோர் வாங்குவதற்கு சற்று சிரமமாக இருக்கிறது. எனவே லாவா மொபைல்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை வழங்க முன்வந்திருக்கிறது.

மலிவு விலை மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய இந்திய நிறுவனமான லாவா வரும் புத்தாண்டில் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்குதளத்தில் இயங்கும் புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த புதிய லாவா ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைத் தவிர்த்து 7 இன்ச் கெப்பாசிட்டிவ் தொடுதிரை மற்றும் 1ஜிஎச் ப்ராசஸர் கொண்டு வருகிறது. அதுபோல் அனானிமஸ் சர்வீஸ் ப்ரவாய்டரிலிருந்து சிம் ஸ்லாட்டையும் கொண்டு வருகிறது.

ஸ்பைஸ் நிறுவனத்தைப் போல லாவா நிறுவனமும் டேப்லெட் துறையில் தீவிரமாக இயங்கி வருகிறது. குறிப்பாக நிறைந்த வசதிகளுடன் கூடிய டேப்லெட்டுகளைக் குறைந்த விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் லாவா தீவிரமாக இருக்கிறது.

மேலும் இன்டெல் பிராசஸரை தனது டேப்லெட்டில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இன்டெல் நிறுவனத்துடன் லாவா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுபோல் ஆரோக்கியம் முதல் கல்வி வரை ஏராளமான அப்ளிகேசன்களையும் இந்த புதிய டேப்லெட்டில் லாவா தரவிருக்கிறது.

லாவாவின் மார்க்கெட்டிங் தலைவர் திரு. சுனில் ரெய்னா கூறும் போது இந்த புதிய டேப்லெட் வரும் ஜனவரியில் வரும் என்றும் மேலும் அதன் விலை ரூ.6,000மாக இருக்கும் என்று கூறுகிறார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X