சென் டேப்லட்டிற்கு போட்டியாக லாவா டேப்லட்!

பொதுவாக 7 இஞ்ச் டேப்லட்டை பயன்படுத்துவது மிக எளிதான விஷயம். கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த 7 இஞ்ச் டேப்லட்கள் இன்னும் சிறந்த தொழில் நுட்ப வசதியினை வழங்கினால், பயன்படுத்துவது இன்னும் எளிது.
ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரினையும் கொடுக்கும். இந்த டேப்லட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் வசதியினை வழங்கும் என்று கூதலாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றி அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட் 2,800 எம்ஏஎச் பேட்டரியினையும் வழங்கும். இதன் முகப்பு கேமரா இந்த டேப்லட்டிற்கு இன்னும் ஒரு ப்ளஸ்.
லாவா நிறுவனத்தின் இ-டேப் இசட்-7-எச் டேப்லட் ரூ. 5,890 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் சென் அல்ட்ரா டேப் ஏ-100 டேப்லட்டின் விலை ரூ. 6,199 என்பதையும் கூற வேண்டி உள்ளது.
லாவா இ-டேப் இசட்-7-எச் டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications