ரூ.14,999/-க்கு லாவா ஹீலியம் 14 லேப்டாப் (அம்சங்கள்).!
லாவா ஹீலியம் 14 லேப்டாப் பொறுத்தமட்டில் 14.1-அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
லாவா நிறுவனம் பல்வேறு லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிட்டுள்ளது, தற்போது அட்டகாசமான லாவா ஹீலியம் 14 லேப்டாப் என்ற மாடலை தற்போது சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த லேப்டாப் பொறுத்தமட்டில் ரூ.14,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது லாவா ஹீலியம் 14 லேப்டாப்.

டிஸ்பிளே:
லாவா ஹீலியம் 14 லேப்டாப் பொறுத்தமட்டில் 14.1-அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1080-1920)வீடியோபிக்சல் இந்த லேப்டாப்பில் இடம்பெற்றுள்ளது.

32ஜிபி மெமரி:
இந்த லேப்டாப் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த லேப்டாப்.

ஜூலை:
இந்த லேப்டாப் ஜூலை முதல் வாரத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் தேர்ந்தேடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
லாவா ஹீலியம் 14 லேப்டாப் பொதுவாக 10,000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆரவு கொண்ட பேட்டரியாக உள்ளது. மேலும்பாதுகாப்பான விண்டோஸ் ஒஎஸ் இவற்றில் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்:
இந்த லேப்டாப் விலைப் பொறுத்தமட்டில் ரூபாய்.14,999க்கு கிடைக்கும். மேலும் தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தின்மூலம் இந்தக் கருவியை மிக எளிமையாக வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications