Home
Computer

ப்ரீ-ஆர்டரில் பட்ஜெட் விலை லாவா டேப்லட்!

By Super

ப்ரீ-ஆர்டரில் பட்ஜெட் விலை லாவா டேப்லட்!
கவர்ச்சிகரமான டேப்லட், கவர்ச்சிகரமான விலையிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு லாவா நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இ-டேப் இசட்-7-எச் டேப்லட் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இ-டேப் இசட்-7-எச் டேப்லட்டினை அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம். இந்த டேப்லட் 7 இஞ்ச் தரையினை வழங்கும். மாலி-400 3டி கிராஃபிக் பிராசஸர் கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் சிறப்பாக இயங்கும். இதன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ-8

பிராசஸர் வசதியினையும் வழங்கும்.

டிடிஆர்-3 512 எம்பி ரேம் வசதியினை கொண்ட இந்த டேப்லட், 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும். இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

இதன் 7 இஞ்ச் திரை வசதி எவ்வளவு துல்லியத்தினை வழங்கும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். டிஎப்ட எல்சிடி மல்டி தொடு திரை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியம், இந்த திரையில் எளிதாக கிடைக்கும்.

வீடியோ சாட் வசதிக்காக இதில் 0.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி இந்த டேப்லட்டில் மெயின் கேமரா ஏதும் கொடுக்கப்படவில்லை. வைபை வசதிக்கு சப்போர்ட் செய்யும், இந்த லாவாவின் புதிய டேப்லட்டில் 3ஜி நெட்வொர்க் வசதியினை பயன்படுத்த முடியும்.

ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டரில் இந்த இ-டேப் இசட்-7-எச் லாவா டேப்லட் ரூ. 5,499 விலையில் கிடைக்கும். இன்னும் இரண்டு வாரத்தில் இந்த டேப்லட் இந்திய ஸ்டோர்களில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X