Home
Computer

மெகா சைஸ் திரையுடன் குஷிரோவின் புதிய டேப்லெட்!

By Karthikeyan
மெகா சைஸ் திரையுடன் குஷிரோவின் புதிய டேப்லெட்!

குஷிரோ நிறுவனம் எப்டி103 என்று ஒரு புதிய டேப்லெட்டை களம் இறக்குகிறது. ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயர்கும் டேப்லெட்டுகளிலேயே மிகவும் பெரிய டேப்லெட் என்று இது கருதப்படுகிறது. ஏனெனில் இந்த டேப்லெட் 21.5 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் எஐஒ டேப்லெட்டுக்கு போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பெரிய திரையில் வரும் இந்த டேப்லெட் டிஐ ஒஎம்எபி 4428 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் திரை மிகத் துல்லியமாக இருக்கும். ஆனால் இதன் திரை நீள்வாக்கில் மட்டுமே இயங்கும். அகலவாக்கில் இந்த திரையை மாற்ற முடியாது. இந்த திரையை சப்போர்ட் செய்ய ஒரு எச்டிஎம் போர்ட் உள்ளது.

இந்த டேப்லெட் மிக வேகமாக இயங்கக்கூடியது. இதன் 1 ஜிபி ரேம் இந்த டேப்லெட்டிற்கு அதிக வேகத்தைக் கொடுக்கும். 8ஜிபி ப்ளாஷ் மெமரியுடன் வரும் இந்த டேப்லெட்டின் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக விரிவுபடுத்தவும் முடியும். மேலும் இந்த டேப்லெட் யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எச்டிஎம்ஐ, மைக்ரோபோன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ப்ளூடூத் + இடிஆர் மற்றும் வைபை போன்ற இணைப்பு வசதிகள் இந்த குஷிரோ டேப்லெட்டில் உள்ளதால் இதில் மிக எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய இயலும். இதன் 1.2எம்பி முகப்பு வெப்காம் மூலம் சூப்பாரன வீடியோ உரையாடலை மேற்கொள்ளலாம்.

இதன் எடை சற்று அதிகம். அதாவது 5 கிலோ எடையில் வருகிறது. இதை மடியில் வைக்க முடியாது. ஆனால் இதை வைப்பதற்கு ஒரு ஸ்டேண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஜூலை இறுதியில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.22,000மாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X