கவர்ச்சிகரமான விலையில் புதிய மெர்குரி டேப்லட்!

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய வெர்ஷனான ஜெல்லி பீன் வெளியிடப்பட்டாலும், ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்ட்ததிற்கு இன்னும் சிறப்பான வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. மெர்குரி எம்டேப்-7 என்ற புதிய 7 இஞ்ச் டேப்லட்டினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது கோபியன் நிறுவனம்.
கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த எம்டேப்-7 டேப்லட் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட இந்த டேப்லட் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் வசதியினை கொடுக்கும். 5112 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினையும் அளிக்கும். கூடுதல் மெமரி வசதியாக இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை பெற முடியும்.
இன்டர்நெட் வசதிக்கு இதில் வைபை மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் இந்த டேப்லட் சிறப்பாக துணை புரியும். 300 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 2,300 எம்ஏஎச் பேட்டரியினை வழங்கும். நவீன தொழில் நுட்பங்களுக்கு தேவையான அளவு பேட்டரி ஆற்றலை இந்த 7 இஞ்ச் டேப்லட்டில் பெறலாம்.
மேலும் 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் இதில் பயன்படுத்த முடியும். இந்த எம்டேப்-7 டேப்லட்டின் விலையும் வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இந்த டேப்லட்டில் ரூ. 6,500 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications