Just In
- 3 min ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
- 1 hr ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
Don't Miss
- News
"மீன் நழுவுதே".. இதான் காரணமா.. பாஜகவின் "சதுரங்க ஆட்டம்".. டெல்லி பறந்த மேட்டர்.. எடப்பாடிக்கு பிளஸ்
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
கீபோர்டு அப்ளிகேஷன்களை தனிப்பட்ட முறையில் நிறுவும் போது கவனிக்க வேண்டியவை!
இந்தக் காலத்தில் தங்களின் ஃபோனில் அளிக்கப்படும் இணைப்பு கீபோர்டுகளுக்கு பதிலாக, மூன்றாம் தரப்பில் இருந்து கிடைக்கும் கீபோர்டு அப்ளிகேஷன்களைப் பெரும்பாலானோர் நிறுவி கொள்கிறார்கள்.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பொறுத்த வரை, இந்த மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மூலம் நமது கீ பயன்பாடுகள் தவறான முறையில் பயன்படுத்துவதற்கான அபாயம் உள்ளது. எனவே மூன்றாம் தரப்பு கீபோர்டு அப்ளிகேஷன்களை நிறுவுவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய காரியங்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் நாங்கள் விளக்க உள்ளோம்.
மூன்றாம் தரப்பு கீபோர்டுகளைப் பொறுத்த வரை, ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், பயனர் உள்ளிடும் கீ பயன்பாடுகள் மற்றும் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை, டெவலப்பர்கள் சேவையகங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.
இந்த அப்ளிகேஷன்களுக்கு நீங்கள் ஒரு முறை அனுமதி அளித்துவிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இருப்பிட சேவைகள், முகவரி புத்தகம் உள்ளிட்டவற்றை அணுகி, நீங்கள் உள்ளிடும் கீ பயன்பாடுகள் மற்றும் சர்வர்-பகுதி செயலாக்கத்திற்கான உள்ளீடுகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறது.
இதில் பெரும்பாலான அப்ளிகேஷன்கள், கீ பயன்பாடுகள் போன்ற டேட்டாக்களை பயனரின் அனுபவத்தை மேம்படுத்தி, அடுத்த எழுத்தை யூகிக்கவே அனுப்பி வைக்கின்றன. சந்தையில் உள்ள இன்னும் சில அப்ளிகேஷன்கள், நாம் முழுமையாக அனுமதி அளிக்காவிட்டாலும் நம் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாவை இயக்குகின்றன.
இதையடுத்து, பயனர்களுக்கு இடையிலான நம்பிக்கையை காப்பாற்றி, பயனரின் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்த தேவைப்படுவதை தவிர மற்ற டேட்டாக்களை சேமிக்க வேண்டாம் என்று கீபோர்டு மேம்பாட்டாளர்களிடம் ஆப்பிள் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. ஏனெனில் ஃபோன் நம்பர்கள், இமெயில் முகவரி மற்றும் முழு பெயர், ஐஎம்இஐ நம்பர்கள், சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள், இருப்பிட தகவல் மற்றும் முகவரி புத்தகம் உள்ளிட்ட சில தகவல்கள், மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களுக்கு எளிதாக கிடைக்க சாத்தியமுள்ளது.
அதே நேரத்தில் பெரும்பாலான பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கீபோர்டு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பல்வேறு அப்ளிகேஷன்களில் காணப்படும் பாதுகாப்பு தன்மைகளை இங்கு பட்டியலிட்டு உள்ளோம்.

ஜிபோர்டு
இன்பில்ட் கூகுல் தேடல், இருப்பிட பகிர்வு, தகவல் பகிர்வு மற்றும் பல என்று இதன் நீண்ட அம்சங்களுக்காக, பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் கீபோர்டு அப்ளிகேஷன்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முன், உங்கள் ஃபோன் டேட்டாவிற்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளது. கூகுலைப் பொறுத்த வரை, நீங்கள் முழு அணுகுலுக்கான அனுமதி அளிக்கும் வரை, எந்த டேட்டாவும் சர்வருக்கு அனுப்பப்படுவதில்லை. பயன்படுத்துபவரின் தேடல் வார்த்தைகளை மட்டுமே கூகுல் பெற்று கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிலிக்ஸி
ஃபிலிக்ஸியைப் பொறுத்த வரை, தங்களின் தனியுரிமை விதிமுறைகளின் கீழ் மொழி நவீனப்படுத்தும் டேட்டாவை பயன்படுத்துகிறார்கள். இந்த விதிமுறைகளின்படி, அப்ளிகேஷனை நிறுவும் போது, டேட்டாவைப் பெறுவதற்கான செயல்பாடு வழக்கமாக முடக்கப்பட்டு, அது வேலை செய்வதில்லை. அதே நேரத்தில் தகவல் பரிமாற்றம் நிகழும் போது, கிடைக்கும் டேட்டாவை ஃபிலிக்ஸி பயன்படுத்திக் கொண்டு, கடவுசொற்களையும் மற்ற தகவல்களையும் சேமிப்பதில்லை.

ஸ்விஃப்ட்கீ
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்விஃப்ட்கீ, பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் விஷயத்தில், உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது. ஸ்விஃப்ட்கீ கிளைவுட் அம்சத்தை பயன்படுத்துவோரிடம் இருந்து, வார்த்தைகள் மற்றும் சொற்தொடர்களைப் பெற்று கொள்ளும் இந்த அப்ளிகேஷன், தனிப்பயனாக்குதல், யூகித்தல் மற்றும் பிற காரியங்களை அளித்து, பயனருக்கு சீரான அனுபவத்தை பெற உதவுகிறது.
அதே நேரத்தில் கடவுசொற்கள் பகுதியானது இந்தச் சேவையில் எடுத்துக் கொள்வதே இல்லை. ஸ்விஃப்ட்கீ கிளவுட்டிற்கு பரிமாற்றம் செய்யப்படும் டேட்டாக்கள் மறைகுறியாக்கப்பட்ட நிலையில் அனுப்பப்படுவதோடு, ஐரோப்பிய யூனியன் தனியுரிமை பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470