புதிய டேப்லட்டை அறிமுகம் செய்யும் கார்பன்!

By Super
|

புதிய டேப்லட்டை அறிமுகம் செய்யும் கார்பன்!
புதிய ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது கார்பன் நிறுவனம். சமீபத்தில் தான் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டில் புதிய வெர்ஷனான ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேஷன் வசதியினை வழங்கியது கார்பன் நிறுவனம்.

அதோடு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனை முதலில் வழங்கிய இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் கார்பன் நிறுவனம் தட்டி சென்றது.

ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டிற்கு ஜெல்லி பீன் அப்டேஷனை வழங்கியதை அடுத்து ஸ்மார்ட் டேப்-2 என்ற டேப்லட்டினை வழங்குகிறது கார்பன் நிறுவனம்.

இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு வி4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இதை தொடர்ந்து 4.1 ஜெல்லி பீன் அப்டேஷனும் வழங்கப்படும்.

ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டில் இருக்கும் 7 இஞ்ச் கேமரா சிறப்பான 5 டச் மல்டி தொடுதிரை வசதியினை கொண்டது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸ்பர்ஸ்டு பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகம நேரம் மியூசிக் போன்றவற்றை கேட்பதற்கு இதன் 3,700 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும். 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும் இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை சப்போர்ட் செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட் டேப்-2 கார்பன் டேப்லட்டின் தொழில் நுட்ப வசதிகளை பார்க்கும் போது இன்னும் ஒரு கூடுதல் தகவலும் உள்ளது. கார்பன் நிறுவனம் அடுத்ததாக 9.7 இஞ்ச் டேப்லட்டினையும் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் விலை பற்றி கார்பன் நிறுவனம் இதுவரை தகவல்களை ஏதும் வெளியிடவில்லை. ஆனால் கார்பன் ஸ்மார்ட் டேப்-1 டேப்லடை ரூ. 6,990 விலையில், ஸ்னேப்டீல் வலைத்ததளத்தில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X