Home
Computer

கியூட்டாக குறைந்த விலையில் புதிய கார்பன் டேப்லட்!

By Super

கியூட்டாக குறைந்த விலையில் புதிய கார்பன் டேப்லட்!
சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் டேப்லட்டை வெளியிட உள்ளது கார்பன் நிறுவனம். இந்த டேப்லட் குறைந்த விலை கொண்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்மார்ட்டேப் ஏ-1 என்ற பெயர் கொண்ட கார்பன் நிறுவனத்தின் இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்டது.

அதோடு சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்க இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் வேகமாக இயங்க 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் பெற்றுள்ளது.

அதோடு இந்த டேப்லட்டில் ஒரு சிறப்பு என்னவென்றால் இதில் எச்டிஎம்ஐ போர்ட் தொழில் நுட்பம் உள்ளதால் டிவியோடு எளிதாக இணைக்கவும் செய்ய முடியும். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இதன் கேமராவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். இந்த கேமராவின் மூலம் 3டி கிரேவிட்டி சென்ஸார் தொழில் நுட்பத்தினையும் பெறலாம்.

கிட்டத்தட்ட இந்த ஸ்மார்ட்டேப் ஏ-1 டேப்லட், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஃபன்புக் டேப்லட்டில் உள்ளது போன்ற தொழில் நுட்பங்களை பெற்று இருப்பதாக தெரிகிறது. கார்பன் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்பேப் ஏ-1 டேப்லட் ரூ.10,000 விலைக்கு குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆனால் மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்லட்டிற்கு சிறந்த போட்டியை இந்த கார்பன் டேப்லட் ஏற்படுத்தும் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்டேப் ஏ-1 டேப்லட் ரூ.6,500 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த டேப்லட் அறிமுகமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X