Home
Computer

கார்பன் ஸ்மார்ட் vs மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்: ஒப்பீடு

By Karthikeyan
கார்பன் ஸ்மார்ட் vs மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்: ஒப்பீடு

இந்திய நிறுவனங்களான கார்போன் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகியவை மலிவு விலை மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளைக் களமிறக்குவதில் கில்லாடிகளாக இருக்கிறன. இவற்றில் கார்போன் சமீபத்தில் கார்போன் ஸ்மார்ட் டேப் என்ற புதிய டேப்லெட்டையும், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் பன்புக் என்ற புதிய டேப்லெட்டையும் களமிறக்கி இருக்கின்றன. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் வைபை வசதியுடன் மலிவு விலையில் வருகின்றன.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் மலிவு விலையில் வந்தாலும் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 7 இன்ச் அளவி்ல் வருகின்றன. கார்போன் டேப்லெட் கருப்பு நிறத்தில் களையாக 800 x 480 பிக்சல் ரிசலூசனுடன் கூடிய டிஎப்டி கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையுடன் வருகிறது. அதே நேரத்தில் மைக்ரோமேக்ஸ் டேப்லெட் ஸ்லேட் க்ரே மற்றும் மிட்நைட் கருப்பு ஆகிய நிறம் கொண்டு 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்டு மல்டி ட்ச் கப்பாசிட்டிவ் திரையுடன் வருகிறது.

கார்போன் ஸ்மார்ட் டேப்லெட் ஆன்ட்ராய்டு வி4.0.3 இயங்கு தளத்திலும் மைக்ரோமேக்ஸ் பன்புக் ஆன்ட்ராய்டு 4.0.3 இயங்கு தளத்திலும் இயங்குகிறது. இரண்டுமே 1.2 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸரைக் கொண்டுள்ளன. க்ராபிக்சிற்காக ஸ்மார்ட் டூவல் மாலி 2டி/3டி ப்ராசஸரையும், பன்புக் டூவல் மாலி 400 ஜிபியுவையும் கொண்டிருக்கிறது.

கேமராவைப் பொருத்தமட்டில் இரண்டுமே பின்பக்க கேமராவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கார்போன் 2 எம்பி முகப்பு கேமராவையும், மைக்ரோமேக்ஸ் 0.3 எம்பி விஜிஎ கேமராவையும் கொண்டுள்ளன. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் எச்டி வீடியோக்களை சப்போர்ட் செய்யும்.

இந்த இரண்டு டேப்லெட்டுகளின் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்கலாம். அதற்காக ஸ்மார்ட் மைக்ரோ எஸ்டிகார்டையும், பன்புக் மைக்ரோ எஸ்டி ப்ளாஷ் கார்டையும் வழங்குகின்றன. இரண்டுமே 4ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டிருந்தாலும் ஸ்மார்ட் டேப்லெட் 512 எம்பி ரேமையும், அதே நேரத்தில் பன்புக் 512 எம்பி டிடிஆர்3 ரேமையும் கொண்டுள்ளன.

இணைப்பு வசதிகளைப் பொருத்தமட்டில் இரண்டுமே 3ஜி, யுஎஸ்பி, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகளை சப்போர்ட் செய்கின்றன. அதுபோல் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே சப்போர்ட் செய்கின்றன. இந்த இரண்டிலும் விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன. அதுபோல் இரண்டிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கும் உண்டு.

பேட்டியைப் பார்த்தால் கார்போன் 3000 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியை கொண்டிருப்பதால் அது 25 மணி நேர மியூசிக் ப்ளே நேரத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் மைக்ரோமேக்ஸ் 2800 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

விலையைப் பொருத்தமட்டில் கார்போன் டேப்லெட்டின் விலை சற்று அதிகமாக இருக்கிறது. அதாவது கார்போன் ஸ்மார் டேப்லெட்டின் விலை ரூ.10000க்கும், மைக்ரோமேக்ஸ் டேப்லெட்டின் விலை ரூ.7000க்கும் விற்கப்படுகிறது.

ஏறக்குகறைய சமமான அளவில் தொழில் நுட்பங்களைக் கொண்டு வரும் இந்த டேப்லெட்டுகள் கடுமையான போட்டியைச் சந்திக்கும் என்பது நிச்சயம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X