Home
Computer

இன்ஃபிபீம் வலைத்தளத்தில் கார்பன் டேப்லட்கள்!

By Super

இன்ஃபிபீம் வலைத்தளத்தில் கார்பன் டேப்லட்கள்!
கார்பன் ஸ்மார்ட் டேப்-3 மற்றும் ஸ்மார்ட் டேப்-9 மார்வல் ஆகிய டேப்லட்களின் ஆன்லைன் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. மின்னணு சாதனங்களை அதிகம் காதலிப்பவர்களுக்கு சந்தோஷமான தகவல்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது தொழில் நுட்பத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வலைத்தளங்கள்.

கார்பன் ஸ்மார்ட் டேப்-3 ப்ளேடு டேப்லட் 7.1 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டதோடு, 5 பாயிண்டு டச் தொடுதிரை வசதியினை அழகாக கொடுக்கும். இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு செல்லும் வழியை தொடர்ந்து செல்லும். ஆம்! ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வசதி கொண்டது. அதோடு 1.3 மெகா பிக்ஸல் கேமராவையும் இதில் சிறப்பாக பெறலாம்.

கார்பன் ஸ்மார்ட் டேப்-3 ப்ளேடு டேப்லட்டின் மெமரி வசதிகள் மிக முக்கியம் என்று கருதுபவர்களுக்கு, மெமரி வசதி பற்றிய தகவல்களும் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் கொண்ட இந்த டேப்லட், 512 ரேம் மற்றும் 1 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி, 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதி ஆகியவற்றை கொடுத்து மகிழ்விக்கும். இதில் 2,800 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக வைபை மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினை கொடுக்கும்.

கார்பன் ஸ்மார்ட் டேப்-9 மார்வல் டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினையும், 9 இஞ்ச் திரையினையும் வழங்குவதாக இருக்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக செயல்பட இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரினையும் கொடுக்கும். சிறப்பான தொழில் நுட்ப விவரத்திற்கு 4,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் அதிக ஆற்றலை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் இதில் வைபை மற்றும் 3ஜி தொழில் நுட்பங்களின் துணையையும் எளிதாக இணைத்து கொள்ளலாம்.

இந்த இரண்டு டேப்லட்களில் 3டி தொழில் நுட்பத்தின் கிராவிட்டி சென்ஸார் வசதியினையும் பெறலாம். கார்பன் ஸ்மார்ட் டேப்-3 ப்ளேடு டேப்லட் ஆன்லைனில் 4,990 விலையிலும், கார்பன் ஸ்மார்ட் டேப்-9 டேப்லட் ரூ. 7,111 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X