ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் கலக்கும் 2 டேப்லட்களின் ஒப்பீடு!

இந்த டேப்லட்கள் ஒன்றை ஒன்று மிஞ்சி கொள்ளும் அளவு தொழில் நுட்பம் கொண்டாதா? அல்லது சரிசமமான தொழில் நுட்ப வசதிகளை வழங்குமா? என்பது பற்றிய விவரங்களை பார்ப்போம்.
கார்பன் டேப்-2 டேப்லட்டின் எடை விவரம் இதுவரை சரிவர வெளியிடப்படவில்லை. அந்த வகையில் க்ரோமா சிஆர்எக்ஸ்டி-1075 டேப்லட் 295 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
இந்த 2 டேப்லட்களின் திரையும் 7 இஞ்ச் அளவு கொண்டாதாக இருப்பதனால், கையில் வைத்து சுலபமாக இயக்கும் சவுகரியத்தினை கொண்டிருக்கும். இந்த 7 இஞ்ச் திரை சிறப்பான தொடுதிரை வசதியினையும், 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்குவதாக இருக்கும்.
க்ரோமா டேப்லட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். அடுத்து கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாகவும் இருக்கும்.
இந்த கார்பன் டேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதள அப்கிரேடு வசதியினையும் கொடுக்கும்.ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் மற்றும் க்ரோமா டேப்லட் ஆகிய இந்த இரண்டும், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவின் மூலம் வீடியோ காலிங் வசதியினை சிறப்பாக கொடுக்கும். ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியை கொடுக்கும். இந்த டேப்லட்களில் மெயின் கேமரா கொடுக்கப்படவில்லை.
இந்த 2 டேப்லட்களிலும் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வதியினையும், 32 ஜிபி வரை மெமரியினை விரிவுபடுத்தி கொள்ளவும் இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்கள் துணை புரியும். இன்டர்நெட் வசதிக்கு வழி வகுக்கும் வைபை மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு இந்த டேப்லட்களின் தொழில் நுட்பம் சப்போர்ட் செய்யும்.
ஸ்மார்ட் டேப்-2 3,700 எம்ஏஎச் லித்தியம் அயான் மற்றும் க்ரோம் சிஆர்எக்ஸ்டி-1075 டேப்லட் 3,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேப்லட்களின் தொழில் நுட்ப வசதி எந்த அளவு முக்கியமோ, அதே அளவு அதன் விலையும் முக்கியத்துவம் பெறுகிறது. கார்பன் ஸ்மார்ட் டேப்-2 ரூ.6,999 விலையினையும், க்ரோமா சிஆர்எக்ஸ்டி-1075 டேப்லட் ரூ. 5,990 விலையிலும் கிடைக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications