Home
Computer

புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்டை களமிறக்கும் கார்பன்!

By Super

புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்டை களமிறக்கும் கார்பன்!
வருகிற செப்டம்பர் மாதம் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்ய இருக்கிறது கார்பன். இப்போது கார்பன் நிறுவனம் மின்னணு சாதன உலகில் அதிரடியாக முன்னேறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்மார்ட் டேப்-1 என்ற புதிய டேப்லட்டினை இன்று அறிமுகம் செய்த கார்பன் நிறுவனம் செப்டம்பர் மாதம், புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்டினை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்டு இயங்கும் கூகுள் நெக்சஸ்-7 டேப்லட்டிற்கு, இந்த கார்பன் டேப்லட் சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெக்சஸ்-7 டேப்லட் 7 இஞ்ச் திரையின் மூலம் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். மேலும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த நெக்சஸ்-7 டேப்லட் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்ட கார்பன் நிறுவனத்தின் புதிய டேப்லட் பற்றிய தொழில் நுட்ப விவரங்கள் ஏதும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

நெக்சஸ்-7 டேப்லட் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி என்று இரண்டு விதமான ஸ்டோரேஜ் வசதியினை இந்த டேப்லட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ஸ்டோரேஸ் கொண்ட டேப்லட் ரூ. 11,000 விலையினையும் மற்றும் 16 ஜிபி கொண்ட டேப்லட் ரூ. 13,000 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

கார்பன் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய டேப்லட் ரூ. 11,000 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X