மின்னணு சாதனங்களை வரிசைகட்டி அனுப்பும் கார்பன்!

ஸ்மார்ட்போன்களை வழங்குவதோடு, கார்பன் ஸ்மார்ட் மார்வல் மற்றும் கார்பன் ஸ்மார்ட் டேப் ப்ளேடு என்ற டேப்லட்களையும் வழங்குகிறது.
ஸ்மார்ட் டேப்-9 மார்வல் மற்றும் ஸ்மார்ட் டேப்-3 ப்ளேடு என்ற இந்த இரண்டு டேப்லட்களும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் வழங்கும். கார்பன் மார்வல் டேப்லட்டில் 4,000 எம்ஏஎச் பேட்டரியினையும் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட் டேப்-9 மார்வல் டேப்லட்டை ரூ. 7,990 விலையினையும், ஸ்மார்ட் டேப்-3 ப்ளேடு டேப்லட்டை ரூ. 5,990 விலையினையும் பெறலாம்.
கார்பன் ஏ-11 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.6 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதி கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4.0 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும்.
3ஜி மற்றும் வைபை போன்ற வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த கார்பன் ஏ-11 ஸ்மார்ட்போன், சிறந்த ஆற்றலை வழங்க 1,500 எம்ஏஎச் பேட்டரியினை கொடுக்கும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.
கார்பன் ஏ-7+, ஏ-1+ ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும். இதில் ஏ-7+ ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசிதயினை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications