Home
Computer

இந்தியாவிலேயே தயாரான முதல் 3ஜி டேப்லெட்டை வழங்கும் கார்போன்

By Karthikeyan
இந்தியாவிலேயே தயாரான முதல் 3ஜி டேப்லெட்டை வழங்கும் கார்போன்

இந்திய நிறுவனமான கார்போன் தற்போது புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளைக் களமிறக்குவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இன்னோமைன்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அக்னி என்ற ஒரு புதிய டேப்லெட்டை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த அக்னி டேப்லெட் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் 3ஜி டேப்லெட் ஆகும்.

இந்த அக்னி டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் க்வல்காம் சினாப்ட்ராகன் ப்ராசஸர் மற்றும் க்வல்காம் டெக்னாலஜிஸ் ரெபரன்ஸ் டிஸைன் போன்ற வசதிகளுடன் வருகிறது.

மேலும் இந்த டேப்லெட் எல், எம் மற்றும் எச் என்று 3 மாடல்களில் வருகிறது. இந்த மூன்று மாடல்களுமே வித்தியாசமான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன.

குறிப்பாக அக்னி எல் மாடல் 7.5 இன்ச் அளவில் ஒரு டபுள்யுவிஜிஎ கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதோடு 1 ஜிஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எஸ்1 ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட் அபாரமாக இயங்கும் என்று நம்பாலம்.

மேலும் இந்த எல் மாடல் டேப்லெட் 3ஜி எச்எஸ்பிஎ இணைப்பு, 1.3எம்பி முகப்பு கேமரா மற்றும் எச்டிஎம்ஐ இணைப்பையும் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இஎம்எம்சி மெமரியையும் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக எம் மாடல் டேப்லெட் 7 இன்ச் அளவில் க்யுஎச்டி ரிசலூசன் கொண்ட திரையுடன் வருகிறது. மேலும் இது டூவல் கோர் சினாப்ட்ராகன் ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம், 8ஜிபி இஎம்எம்சி மெமரி, 3ஜி எச்எஸ்பிஎ இணைப்பு, 1.3எம்பி முகப்புக் கேமரா, 5எம்பி பின்பக்கக் கேமரா மற்றும் எச்டிஎம்ஐ இணைப்பு ஆகியவற்றைப் பார்க்கலாம்.

இறுதியாக உயர் தரத்தில் வரும் எச் மாடல் டேப்லெட் 7 மற்றும் 10 இன்ச் அளவுகளில் திரையைக் கொண்டு 720பி ரிசலூசனை வழங்குகிறது. இந்த டேப்லெட்டும் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளம் மற்றும் டூவல் கோர் சினாப்ட்ராகன் ப்ராசஸரில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம், 8ஜிபி இஎம்எம்சி மெமரி, 1.3எம்பி முகப்புக் கேமரா மற்றும் 5எம்பி பின்பக்கக் கேமரா போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த டேப்லெட்டில் எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி இணைப்பு வசதிகளும் உண்டு.

மேற்சொன்ன இந்த மூன்று டேப்லெட்டுகளையும் வரும் தீவாளி சமயத்தில் களமிறக்க கார்போன் திட்டமிட்டிருக்கிறது. இவற்றின் விலை பின்பு அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X