அப்படி போடு.. Jio லேப்டாப் விலை குறைந்தது.. 4GB ரேம், 256GB மெமரி.. ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க..
ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் (JioBook) எனும் லேப்டாப் மாடலை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த ஜியோ லேப்டாப் தற்போது விலைகுறைப்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஜியோ ஓஎஸ், மீடியாடெக் சிப்செட், எல்இடி பேக்லைட் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஜியோபுக் மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜியோபுக் மாடல் ரூ.16,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த லேப்டாப் மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.12,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அமேசான் (Amazon), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளங்களில் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்த்கது

ஜியோபுக் அம்சங்கள் (JioBook Specifications): அதாவது ஜியோபுக் லேப்டாப் ஆனது 11.6 இன்ச் எல்இடி பேக்லைட் (LED Backlight) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த ஆக்ட கோர் மீடியாடெக் எம்டி 8788 (Octa Core Mediatek MT 8788) சிப்செட் உடன் இந்த ஜியோபுக் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சிப்செட் 64 பிட் (64 bit) சப்போர்ட் கொண்டது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த லேப்டாப் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஜியோ ஓஎஸ் (JioOS) மூலம் இந்த ஜியோ லேப்டாப் மாடல் இயங்குகிறது. குறிப்பாக இதில் மேம்பட்ட புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். அதோடு இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆர்ம் மாலி ஜி72 (ARM Mali G72 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது. எனேவ கேமிங் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம்.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஜியோபுக் மாடல் வெளிவந்துள்ளது. கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். அதாவது நீங்கள் 256ஜிபி வரை மெமரி கார்டு பயன்படுத்த எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் எல்இடி இன்டிகேட்டருடன் 2 எம்பி எச்டி கேமரா கொண்டுள்ளது இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல். மேலும் டூயல் பேண்ட் வைபை 802.11, 4ஜி சிம் எல்இடி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலில் உள்ளன. ஜியோ ப்ளூ (Jio Blue) கலரில் இந்த அசத்தலான லேப்டாப் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட வசதிகள் இந்த ஜியோபுக் மாடலில் உள்ளன. பின்பு டூயல் எம்இஎம்எஸ் டிஜிட்டல் மைக் (Dual MEMS Digital Mic) ஆதரவு உள்ளது. அதேபோல் 4000 mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த லேப்டாப். எனவே இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 8 மணி நேரம் பேக்கப் கிடைக்கும் என நிறுவனம் கூறுகிறது. பேட்டரி உடன் சேர்த்து 990 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த ஜியோ லேப்டாப்.


Click it and Unblock the Notifications








