அசத்தலான விலையில் JioBook.. வெறும் 990 கிராம் எடையில் அம்பானியின் அடுத்த அதிரடி.. ஜூலை 31 அறிமுகம்!
ஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோபோன் 4ஜி மாடலுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இன்னும் சில மாதங்களில் ஜியோபோன் 5ஜி மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம்.
இந்நிலையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஜியோபுக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம். அதாவது இந்த ஜியோபுக் லேப்டாப் 2023 (JioBook laptop 2023) ஆனது வரும் ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலின் டீசர் அமேசான் தளத்தில் வெளியானது.

எனவே இந்த புதிய லேப்டாப் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 4ஜி ஆதரவு, ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லேப்டாப் கம்மி விலையில் அறிமுகமாகும். மேலும் இந்த லேப்டாப் மாடலின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
வீடியோ ஸ்ட்ரீமிங், ஆபீஸ் வேலைகளுக்கு தகுந்த சிறப்பான மென்பொருள் வசதியுடன் இந்த ஜியோபுக் லேப்டாப் 2023 வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஜியோ அறிமுகம் செய்ய புதிய லேப்டாப் ஆனது 990 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல் ஒரு நாள் முழுவதும் ஜியோபுக் லேப்டாப் 2023 ஆனது பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த ஜியோபுக் லேப்டாப் 2023 ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலின் சில விவரங்கள் தான் வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய லேப்டாப் மாடலின் அனைத்து விவரங்களும் தெரியவரும். மேலும் இந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்கனவே ஜியோபுக் லேப்டாப் 2022 மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இப்போது இந்த ஜியோபுக் லேப்டாப் 2022 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் ஜியோபுக் லேப்டாப் 2022 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் கூட குறைந்த எடையில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
11.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த ஜியோபுக் லேப்டாப் 2022 மாடல் அறிமுகமானது. பின்பு 1366 x 768 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். அதேபோல் இந்த லேப்டாப் ப்ளூ நிறத்தில் கிடைக்கும். பின்பு இந்த லேப்டாப் ஜியோவிற்கு சொந்தமான JioOS இல் இயங்குகிறது.

இந்த ஜியோபுக் லேப்டாப் 2022 ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தைப் பயனர்கள் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். குறிப்பாக 60Hz ரெப்ரெஷ் ரேட், டூயல் ஸ்பீக்கர்கள், வைஃபை 802.11 ஏசி, போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப்.
மேலும் ஜியோபுக் லேப்டாப் 2022 மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இதை முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.0, ஜியோ 4ஜி எல்இடி, உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. இந்தியாவில் ஜியோபுக் லேப்டாப் 2022 மாடல் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








