கோடையில் ஐபோன் 5 மற்றும் ஐபேட் 5 ஆகியவற்றைக் களமிறக்கும் ஆப்பிள்

கடந்த மாதம் ஆப்பிள் தனது 7.9 இன்ச் ஐபேட் மினி போனைக் களமிறக்கியது. இந்த போன் இன்னும் இந்திய மொபைல் சந்தையில் இன்னும் களமிறங்கவில்லை. அதே வேளையில் ஐபோன் 5 கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் சில்லறை விற்பனைக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஆப்பிள் அடுத்த தலைமுறைக்கான புதிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைத் தயாரிக்க இருப்பதாக இணைய தளங்களில் பரவலாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக 2013 மத்தியில் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபேட் 5 ஆகிய புதிய போன்களை ஆப்பிள் களமிறக்கக்கூடும் என்று ஒரு முக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த இரண்டு போன்களும் ஐபோன் 5 மற்றும் ஐபேட் 4 ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் இந்த இரண்டு போன்களும் பக்காவான செயல் திறனுடன் வரும். அதுபோல் இதன் விற்பனையும் அமோகமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் டிசம்பர் மாதம் முதலே ஐபோன் 5 எஸ் மாதிரி போன்களை ஆப்பிள் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு வரும் கோடை காலத்தில் ஆப்பிள் தனது புதிய அடுத்த தலைமுறைக்கான போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications