Home
Computer

புதிய ஐபேடைப் பற்றிய புதிர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள்!

By Karthikeyan
புதிய ஐபேடைப் பற்றிய புதிர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள்!

ஆப்பிளின் புதிய ஐபேடைப் பற்றிய பரபரப்பு செய்திகளுக்கும் மற்றும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய ஐபேடை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய ஐபேட் உயர்தர தொழில் நுட்பத்துடன் வருகிறது.

இந்த புதிய ஐபேட் 2048x1536 பிக்சல் ரிசலூசன் கொண்ட ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வருகிறது. ஆப்பிளின் புதிய எ5எக்ஸ் சிப் மற்றும் க்வாட் கோர் க்ராபிக்ஸ் ஆகியவற்றை இந்த புதிய ஐபேடிற்கு ஆப்பிள் வழங்கியிருக்கிறது. இந்த புதிய ஐபேடிற்கு பலரும் ஐபேட்3 மற்றும் ஐபேட் எச்டி போன்ற பல பெயர்களைச் சூட்டியிருந்தனர்.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி மிக எளிமையாக புதிய ஐபேட் என்று பெயர் சூட்டியிருக்கிறது ஆப்பிள். ஆனால் ஐபேட் 1 மற்றும் 2 ஆகியவற்றிலிருந்து இந்த புதிய ஐபேட் எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த புதிய ஐபேட் ஏராளமான தொழில் நுட்பங்களைத் தாங்கி வருகிறது. அதாவது இதன் ரெட்டினா டிஸ்ப்ளே 9.7 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. பின்பக்கம் 5 மெகா பிக்சல் ஐசைட் கேமராவையும் முகப்பில் விஜிஎ கேமராவையும் தாங்கி வருகிறது.

42.5 வாட் நேரம் கொண்ட ரிசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பாலிமர் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. வைபையோடு சேர்த்து இதன் எடை 652 கிராம் ஆகும். வைபை மற்றும் 4ஜியோடு சேர்த்து இதன் எடை 662 கிராம் ஆகும். இதன் தடிமன் 9.4 மிமீ ஆகும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த புதிய ஐபேட் வைபை 802.11 எ/பி/ஜி/என் மற்றும் ப்ளூடூத் 4.0 போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் 16ஜிபி/ 32ஜிபி/ 64ஜிபி போன்ற சேமிப்பு அளவுகளைக் கொண்டு வருகிறது. மேலும் வைபை மற்றும் வைபை + 4ஜி போன்ற மாடல்களில் வருகிறது. இதன் விலை 499 அமெரிக்கா டாலர்களிலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X