இந்தியாவில் ப்ரீ ஆர்டரில் ஐபேட் மினி

Posted By: Karthikeyan
இந்தியாவில் ப்ரீ ஆர்டரில் ஐபேட் மினி

ஆப்பிள் தனது புதிய ஐபேட் மினியை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த நிலையில் பல நாடுகளுக்கு இந்த ஐபேட் மினியை ப்ரீ ஆர்டரில் விற்க முதலில் திட்டமிட்டிருந்தது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை.

ஆனாலும் தற்போது இந்தியாவில் இருப்பவர்களும் இந்த ஐபேட் மினியை வாங்க இபே ஆன்லைன் கடையில் ப்ரீ ஆர்டர் செய்யலாம். இந்த 7.9 இன்ச் ஐபேட் மினி டேப்லெட்டின் 16ஜிபி வைபை மட்டும் மாடலை வாங்க ரூ.28,990 செலுத்தி ப்ரீ ஆர்டர் செய்யலாம்.

இந்த ஐபேட் மினி வரும் நவம்பர் 12 முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனையாக இருக்கிறது. இந்த ஐபேட் மினியில் 2,75000க்கும் அதிகமான அப்ளிகேசன்களை இயக்க முடியும். இந்த ஐபேட் மினியில் மிகவும் வேகமாக இயங்கும் எ5 சிப், பேஸ் டைம் எச்டி, 5எம்பி ஐசைட் கேமராக்கள் மற்றும் அல்ட்ராபாஸ்ட் வயர்லஸ் மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் ஆகிய சூப்பரான வசதிகள் உள்ளன.

ஐபேட் மினியில் மிக எளிதாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் இந்த சாதனத்தில் வரும் வைபை மற்றும் ப்ளூடுத் ஆகியவை மிக வேகமாக இயங்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் இந்த ஐபேட் மினி எல்டிஇ மற்றும் டிசி-எச்எஸ்டிபிஎ வசதிகளையும் கொண்டு வருகிறது. அதனால் இந்த புதிய ஐபேட் மினி ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்