Home
Computer

புதிய ஆப்பிள் ஐபேடுக்கு புதிய டிஸ்ப்ளே தொழில் நுட்பம்!

By Karthikeyan
புதிய ஆப்பிள் ஐபேடுக்கு புதிய டிஸ்ப்ளே தொழில் நுட்பம்!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய டிவைஸான ஐபேட்-3யை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது. அதிலிருந்து இந்த புதிய ஐபேட்-3யைப் பற்றி ஏராளமான எதிர்பார்ப்புகளும், வதந்திகளும் மற்றும் மிகைப்படுத்துதல்களும் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது டிஜிடைம்ஸ் நிறுவனத்திலிருந்து ஐபேடைப் பற்றி ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது. அதாவது ஆப்பிள் தனது ஐபேடு 3ல் ஐஜிஸட்ஒ டிஸ்ப்ளே பேனலைப் பயன்படுத்த இருக்கிறது என்பதாகும். ஐஜிஸட்ஒ என்பது இன்டியம் கலியம் சின்க் ஆக்ஸைடு ஆகும்.

தற்போது ஐபேடு, ஐபேடு2, ஐபேடு4 மற்றும் ஐபேடு4எஸ் போன்றவை இன்-ப்ளைய்ன் சுவிட்ச்சிங் டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளன. அதனால் இந்த புதிய ஐஜிஸட்ஒ டிஸ்ப்ளே மேம்படுத்தப்பட்டதாகவும் அதே நேரத்தில் இவை மற்ற ஸ்மார்ட்போன்களைவிட மிகத் தரமானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் அடர்த்தி 330 பிக்சல்களாக இருக்கும்.

ஆனால் பெரும்பாலான டேப்லெட்டுகள் மேற்சொன்ன அடர்த்தியை விட பாதி அளவு பிக்சல் அடர்த்தியையே வழங்குகின்றன. மேலும் இந்த புதிய டிஸ்ப்ளேக்கு குறைவான மின்திறனே தேவைப்படும். மேலும் இந்த ஐஜிஸட்ஒ டிஸ்ப்ளே இப்போதிருக்கும் ஐபிஎஸ் டிஸ்ப்ளேக்களைவிட மிகவும் மெல்லியதாக இருக்கும். மேலும் இந்த டிஸ்ப்ளேயை தயாரிக்க ஆகும் செலவு இப்போதிருக்கும் டிஸ்ப்ளேக்களை தயாரிக்க ஆகும் செலவைவிட மிகக் குறைவே.

இவ்வாறு சிறந்த டிஸ்ப்ளே கொண்டு வரும் ஐபேட் 3 வரும் பிப்ரவரி 24ந்தேதி மறைந்த ஆப்பிள் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக புதிய டிஸ்ப்ளேயுடன் வரும் புதிய ஐபேடு 3 டேப்லெட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X