ஆப்பிளின் புதிய ஐபேடின் பெயர் ஐபேட் எச்டி!

By Karthikeyan
|
ஆப்பிளின் புதிய ஐபேடின் பெயர் ஐபேட் எச்டி!

தனது புதிய ஐபேட் 3க்கு ஐபேட் எச்டி என்று பெயர் சூட்டியுள்ளது ஆப்பிள். இந்த புதிய ஐபேடைப் பற்றி பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இதற்கு முன் ஆப்பிளின் இந்த புதிய ஐபேடுக்கு ஐபேட் 3 என்ற பெயர் இடப்படும் என்று நம்பப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய ஐபேடின் பெயர் ஐபேட் 2 ஆகும். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஆப்பிள் இந்த புதிய பெயரை சூட்டியிருக்கிறது. குறிப்பாக ஆப்பிள் இந்த புதிய ஐபேடின் டிஸ்ப்ளே தொழில் நுட்பங்களை எளிதாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆப்பிள் இந்த பெயரை சூட்டியிருக்கிறது.

இந்த புதிய ஐபேட் ரெட்டினா டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 2048 x 1536 ஆகும். ஆனால் ஐபேட் 2ன் டிஸ்ப்ளே ரிசலூசன் 1024 x 768 மட்டுமே. அதாவது புதிய ஐபேடில் 2 மடங்கு பிக்சல் ரிசலூசனை ஆப்பிள் அதிகரித்திருக்கிறது.

இந்த புதிய ஐபேடில் மிக உயர்ந்த ரிசலூசன் இருப்பதால் இதில் படங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். இதலிருக்கும் வண்ணங்களும் மிகத் துல்லியமாக இருக்கும். இந்த புதிய ஐபேட் எச்டி டேப்லெட் மட்டுமே முழு உயர் டெபினிசன் வீடியோ 1920 x 1080 பிக்சலை சப்போர்ட் செய்யும். இதுபோல் இந்த புதிய டேப்லெட்டில் உள்ள பிக்சலின் அடர்த்தி ஒரு இன்ச்சுக்கு 264 பிக்சல்கள் ஆகும்.

மேலும் இந்த புதிய கேமரா மிக சிறந்த கேமராவையும் அதுபோல் உயர் வேகம் கொண்ட எ5எக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் எல்டிஇ இணைப்பையும் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. அதுபோல் சிரி (ஸ்பீச் இன்டர்ப்ரடேஷன் அன்ட் ரிக்கக்னிசன் இன்டர்பேஸ்) என்ற வசதியும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த டேப்லெட்டில் எதிர்பார்க்கலாம்.

ஆப்பிளின் இந்த புதிய ஐபேட் எச்டி விரைவில் விற்பனைக்கு வரும் என நம்பலாம். அதற்கான தேதி மற்றும் இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X