Home
Computer

மல்லுக்கட்டும் ஐபேட்3 மற்றும் மோட்டோ ஸைபோர்டு!

By Karthikeyan
மல்லுக்கட்டும் ஐபேட்3 மற்றும் மோட்டோ ஸைபோர்டு!

டேப்லெட் சந்தையில் ஐபேட்3 மற்றும் மோட்டோரோலா எக்ஸிபோர்ட் 10.1 ஆகிய டேப்லெட்டுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் சூப்பரான தொழில் நுட்பங்களையும் அட்டகாசமான தொழில் நுட்பங்களையும் கொண்டிருக்கின்றன.

ஐபேட்3 டேப்லெட் 2048 x 1536 பிக்சல் ரிசலூசன் கொண்ட 9.70 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது என்றால் எக்ஸிபோர்ட் 10.1 டேப்லெட் 1280 x800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 10.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. ஐபேட் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வருகிறது. ஆனால் எக்ஸிபோர்ட் கருப்பு நிறத்தில் மட்டும் வருகிறது.

ஐபேட் 3 கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையையும் எக்ஸிபோர்ட் ஸ்டைலஸ் சப்போர்ட்டுடன் கூடிய தொடுதிரையையும் கொண்டிருக்கிறது.

ஐபேட் ஐஒஎஸ் (5.1) இயங்கு தளத்தையும், டூவல் கோர் ஆப்பிள் எ5எக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது. அதுபோல் ஐபேடில் க்வாட் கோர் ஜிபியு உண்டு. அதே நேரத்தில் எக்ஸிபோர்ட் ஆன்ட்ராய்டு 3.2 இயங்குதளத்தையும், 1.2 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது. இதன் ஜிபியு பவர்விஆர் எஸ்ஜிஎக்ஸ்530 ஆகும். இந்த இரண்டு டேப்லெட்டுகளிலும் சிப்செட் கிடையாது.

கேமராவைப் பொருத்தமட்டில் ஐபேட் 5 எம்பி கொண்ட ரியர் கேமராவையும், 0.3 எம்பி விஜிஎ முகப்பு கேமராவையும் கொண்டிருக்கிறது. இதில் 1080பி எச்டி வீடியோ பதிவு மற்றும் ஜியோ டேக்கிங் சப்போர்ட் உண்டு. அதே நேரத்தில் எக்ஸிபோர்ட் 5 எம்பி ரியர் கேமராவையும், 1.3 எம்பி வெப்காமையும் கொண்டிருக்கிறது. இந்த கேமரா 1080பி வீடியோ ப்ளேபேக்கையும் ஜியோ டேக்கிங்கையும் சப்போர்ட் செய்யும்.

சேமிப்பு வசதியைப் பொருத்தவரை ஐபேட் 64 ஜிபி வரை வரிவுபடுத்தக்கூடிய 1024 எம்பி ரேமைக் கொண்டிருக்கிறது. ஆனால் எக்ஸிபோர்ட் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடி அளவிற்கு 16 ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது. எனவே சேமிப்பைப் பொருத்தவரை ஐபேட் அதிக வசதியைக் கொண்டிருக்கிறது என்று கருதலாம்.

இணைப்பு வசதிகளைப் பொருத்தவரை இந்த இரண்டு டேப்லெட்டுகளும் ஜிபிஆர்எஸ், எட்ஜ், 3ஜி, ப்ளூடூத், யுஎஸ்பி போன்றவற்றை சப்போர்ட் செய்கின்றன.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த இரண்டு டேப்லெட்டுகளும் அட்டகாசமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது ஐபேட் மல்டி பார்மட் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயரை சப்போர்ட் செய்கிறது. அதே நேரத்தில் எக்ஸிபோர்ட் கூகுள் மீயூசிக் ப்ளேயர் மற்றும் மல்டி பார்மட் வீடியோ ப்ளேயரை சப்போர்ட் செய்கிறது.

இரண்டு டேப்லெட்டுகளும் கேம்களை சப்போர்ட் செய்கின்றன. இரண்டிலும் பில்ட் இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஐபேட் 11560 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியையும் எக்ஸிபோர்ட் 7000 மெகா ஹெர்ட்ஸ் லயன் பேட்டரியையும் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளின் விலையும் ரூ.25000லிருந்து தொடங்குகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X