Home
Computer

விரைவில்... ஆப்பிள் ஐபேட்-2 எஸ்?

By Karthikeyan
 விரைவில்... ஆப்பிள் ஐபேட்-2 எஸ்?

கடந்த 6 மாதங்களாக வரவிருக்கும் புதிய ஐபேடைப் பற்றி ஏராளமான வதந்திகளை பல இணைய தளங்கள் அள்ளிவிடுகின்றன. அதனால் இந்த புதிய டிவைஸ் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு சில இணைய தளங்கள் இந்த புதிய ஐபேடின் படங்களையும் கசியவிட்டிருக்கின்றன. ஆனால் இதுவரை இந்த புதிய ஐபேடைப் பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் ஆப்பிளிடமிருந்து வரவில்லை.

அதுபோல் இந்த புதிய ஐபேடின் பெயரும் தெரியவில்லை. ஆனால் ஐபேட் 3 அல்லது ஐபேட் 2எஸ் என்ற பெயரைக் கொண்டிருக்கலாம் என்ற வதந்தி பரவுகிறது. மேலும் இந்த புதிய டிவைஸ் க்வாட்கோர் ஏ-6 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்ற வதந்தியும் நிலவுகிறது. பல இணைய தளங்களின் முக்கிய செய்தியாக இந்த புதிய ஐபேட் இருக்கிறது.

அடுத்ததாக வந்திருக்கும் தகவல் என்னவென்றால் இந்த டிவைஸ் எல்டிஇ வசதிகளைக் கொண்டிருக்கும் என்பதாகும். இந்த புதிய டிவைஸ் க்ளோபல் ரேடியோவையும் கொண்டிருக்கும் என்ற தகவலும் வருகின்றது.

இப்போது வந்திருக்கும் புதிய தகவல், புதிய ஐபேட் ஏ-6 ஜிபியு மாடலைக் கொண்டிருக்காது என்பதாகும். ஏனெனில் ஐபேடைப் பற்றிய படங்களில் **45X என்ற எண் மட்டுமே உள்ளது. ஆனால் க்வாட் கோர் எ3 ஜிபியு இல்லை என்பது அவர்கள் வாதம். ஆக புதிய ஐபேடைப் பற்றி ஏகப்பட்ட தகவல்களும் வதந்திகளும் சராமாரியாக வந்தாலும் ஆப்பிள் இன்னும் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X