Home
Computer

ஆப்பிள் ஐபேட்-2, பிளாக்பெர்ரி ப்ளேபுக்- ஒப்பீட்டு சிறப்பு பார்வை

By Super
ஆப்பிள் ஐபேட்-2, பிளாக்பெர்ரி ப்ளேபுக்- ஒப்பீட்டு சிறப்பு பார்வை
டேப்லெட் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், அனைவருக்கும் ஆப்பிள் ஐபேட்-2வும், பிளாக்பெர்ரி ப்ளேபுக்கும் கண்முன் நிழலாடுகின்றன. தரம், வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் இரண்டும் சர்வதேச அளவில் முத்திரை பதித்த மாடல்களாக திகழ்கின்றன.

டேப்லெட் என்றவுடனே கண்ணை மூடிக்கொண்டு இரண்டு பெயர்களையும் மட்டுமே கூறுவதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள இங்கு ஒரு சிறிய ஒப்பீட்டு அலசலை காணலாம்.

இரண்டுமே ஆற்றல்வாய்ந்த சாதனங்கள் என்பதை மறுக்க இயலாது. இருப்பினும், வசதிகள் மற்றும் தொழில்நுட்ப சிறப்புகள் அடிப்படையில் ஒப்பீட்டை பார்க்கலாம்.

இரண்டில், ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட் 8.8மிமீ தடிமனுடன் 607கிராம் எடை கொண்டதாகவும், பிளாக்பெர்ரி ப்ளேபுக் 10 மிமீ தடிமனுடன் 425கிராம் மட்டுமே எடை கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால், இதில், ஆப்பிள் ஐபேட்-2 தடிமன் குறைந்ததாக இருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

பிளாக்பெர்ரி ப்ளேபுக் 7 இஞ்ச் கெப்பாஸிட்டிவ் டிஎப் திரை கொண்டதாகவும், ஆப்பிள் 9.7 இஞ்ச் எல்இடி பேக்லிட் டிஎப்டி திரை கொண்டதாகவும் இருக்கிறது. இதில், ஆப்பிள் ஐபேட்-2 துல்லியத்தில் வெற்றி காண்கிறது. மேலும், ஐபேட்-2 திரை கீறல்கள் விழாத ஒலியோ ஃபோபிக் தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது.

இரண்டு டேப்லெட்டுகளின் திரைகளிலும் மல்டி டச் வசதி மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் சென்ஸார் ஆகியவை இருக்கின்றன. அப்ளிகேஷன்களை இயக்குவதில் பிளாக்பெர்ரி ப்ளேபுக் 1 ஜிபி ரேமை பெற்றுள்ளதால் சிறப்பான வேகத்தில் செயல்படுகிறது. அதேவேளை, ஐபேட்-2 ரேம் 512எம்பி திறன் கொண்டதாக மட்டுமே இருக்கிறது.

இரண்டிலும் ஹெட்போன் மற்றும் ஹோம் தியேட்டர்களை இணைத்துக்கொள்ளும் வசதிக்காக 3.5மிமீ ஆடியோ ஜாக் கொடு்க்கப்பட்டுள்ளது. இரண்டுமே 64 ஜிபி வரை சேமித்துக்கொள்ளும் வசதியை அளிக்கின்றன. ஆனால், சேமிப்பு திறனை கூட்டிக்கொள்வதற்காக மெமரி கார்டு சொருகுவதற்கான ஸ்லாட்டுகள் இல்லை. ஸ்டீரியோ ஸ்பீக்கரும் பொதுவாக இருக்கின்றன.

டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்ட ஐபேட்-2 வேகத்தில் பின்னுகிறது. 1ஜிகாஹெர்ட்ஸ் ஏ-5 ஏஆர்எம் அப்ளிகேஷன் பிராசஸர் கிராபிக்ஸ் வீடியோக்களை முந்தைய வெர்ஷன்களைவிட 9 மடங்கு அதிவேகத்தில் தருகிறது.

பிளாக்பெர்ரி ப்ளேபுக்கில் டியூவல் கோர் 1ஜிகாஹெர்ட்ஸ் ஏ-9 பிராசஸரும், 1ஜிபி ரேமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டில் பிளாக்பெர்ரி ப்ளேபுக் சபாஷ் பெறுகிறது.

இரண்டு டேப்லெட்டுகளும் டியூவல் கேமரா வசதியை அளிக்கின்றன. இதில், பிளாக்பெர்ரி ப்ளேபுக்கில் பொருத்தப்பட்டுள்ள முதன்மை கேமரா 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. அதேவேளை, ஐபேட்-2 மாடல் 720பி துல்லியத்தில் மட்டும் வீடியோ ரெக்கார்டிங் செய்கிறது.

மேலும், எச்டிஎம்ஐ அவுட்புட், கைரோ சென்சாருடன் கூடிய கேமரா, ஐ-மூவி, கேரேஜ்பேண்டு உள்ளிட்டவை ஐபேட்-2வை ஒரு சிறிய மியூசிக் சாதனமாகவே மாற்றிவிடுகிறது. பிளாக்பெர்ரி ப்ளேபுக்கிலும் புளூடூத் டீத்தெரிங், வைஃபை ஹாட்ஸ்பாட், வை-மேக்ஸ் உள்ளிட்ட வசதிகளை அள்ளித்தருகிறது.

அருமையான பேட்டரி பேக்கப் கொண்ட ஐபேட்-2வை அட்டாகாசமான கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தேர்வு செய்யலாம். 5,300 எம்ஏஎச் திறன் கொண்ட பிளாக்பெர்ரி ப்ளேபுக்கை கறுப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை சேமிப்பு திறனை பொறுத்து ஐபேட்-2 ரூ.30,000 முதல் ரூ.40,000 விலையில் கிடைக்கிறது. பிளாக்பெர்ரி ப்ளேபுக் ரூ.28,000 முதல் ரூ.38,000 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X