ரூ.6,490 விலையில் புதிய இன்டெக்ஸ் டேப்லட்!

Posted By: Staff
ரூ.6,490 விலையில் புதிய இன்டெக்ஸ் டேப்லட்!
இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது இருக்கும் மோகம் குறையவில்லை போலிருக்கிறது.

நிறைய நிறுவனங்கள் ஐசிஎஸ் இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. ஐ-பட்டி என்ற டேப்லட்டினை இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்கிறது.

7 இஞ்ச் திரை வசதியினை கொண்ட இன்டெக்ஸ் நிறுவனத்தின் ஐ-பட்டி டேப்லட், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும்.

இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர், இந்த டேப்லட்டின் இயங்குதளம் சிறப்பாக இயங்க துணை புரியும். இந்த டேப்லட்டில் வீடியோ சாட்டிங் வசதிக்காக முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

9 மி.மீ தடிமனையும், 316 கிராம் எடையினையும் கொண்ட ஐ-பட்டி டேப்லட், 4 ஜிபி மெமரியினையும் வழங்கும். இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

ஐ-பட்டி டேப்லட் 2,350 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறப்பான பேட்டரி ஆற்றலையும் கொடுக்கும். 3ஜி டோங்கில் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட், அருமையாக வைபை தொழில் நுட்ப வசதிக்கும் துணை புரியும்.

பிராந்திய நாடுகளில் அறிமுகமாக இருக்கும் இந்த ஐ-பட்டி டேப்லட்டின் தொழில் நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.

இந்த ஆண்டு இன்டெக்ஸ் நிறுவனம் 3.6 லட்சம் மொபைல்களையும், 60,000 டேப்லட்களையும் விற்பனை செய்ய இருப்பதாகவும், இது மட்டுமல்லாது 400 கோடி வருவாயை இந்த ஆண்டு ஈட்ட முடிவு செய்திருப்பதாகவும் இன்டெக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி சஞ்சய் குமார் தெரிவித்திருக்கிறார்.

2012 - 2013ம் ஆண்டில் தென் இந்திய மார்கெட் மூலம் 15 சதவிகிதம் வருமானத்தை பெற முடியும் என்றும் இந்த நிறுவனம் மதிப்பிட்டு கூறுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்