Home
Computer

பொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் இன்டெக்ஸ் டேப்லெட்!

By Karthikeyan
பொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் இன்டெக்ஸ் டேப்லெட்!

இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே தாம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்க இருப்பதாக இன்டெக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தியாவைச் சேர்ந்த இந்த இன்டக்ஸ் தற்போது அந்த டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு இன்டெக்ஸ் ஐ பட்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 22ல் இந்த டேப்லெட் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த டேப்லெட்டை வாங்க Infibeam.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அதோடு இந்த டேப்லெட் ரூ.6,490க்கு விற்கப்படுகிறது. இந்த டேப்லெட்டை இலவசமாக டோர் டெலிவரி செய்கிறது இன்டெக்ஸ்.

அதோடு இந்த டேப்லெட்டை வாங்க முன்பே பணம் செலுத்த வேண்டியதில்லை. டெலிவரி செய்யும் நேரத்தில் கூட பணத்தைச் செலுத்தலாம். அதோடு ரூ.2,590 பெருமானமுள்ள ஒரு எம்ஐடி கீபோர்டு பெட்டியையும் இலவசமாக இன்டெக்ஸ் வழங்குகிறது.

இந்த ஐ பட்டி டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் ஒரு கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதோடு 512எம்பி டிடிஆர்III ரேம் மற்றும் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி, வைபை மற்றும் 3ஜி வசதிகளையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. இதன் முகப்பு கேமரா மூலம் அழகாக வீடியோ உரையாடல்களை நடத்தலாம். மேலும் இதன் 4ஜிபி மெமரியை மெமரி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்கலாம்.

இந்த டேப்லெட் சூப்பரான பொழுதுபோக்கு அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக எவிஐ, டபுள்யுஎம்வி, எம்பி4, எம்கேவி, ஆர்எம், ஆர்எம்விபி, எப்எல்வி, விஒபி, எம்ஒவி மற்றும் 3ஜிபி போன்ற வீடியோ பார்மட்டுகளை இந்த டேப்லெட் சப்போர்ட் செய்கிறது. அதோடு எம்பி3, டபுள்யுஎம்எ, எஎசி, எஎம்ஆர், ஒஜிஜி, டபுள்யுஎவி, எபிஇ மற்றும் ப்ளாக் போன்ற ஆடியோ பார்மட்டுகளையும் இந்த டேப்லெட் சப்போர்ட் செய்கிறது.

மேலும் இந்த டேப்லெட் ஜேபிஇஜி, பிஎம்பி, ஜிஐஎப் மற்றும் பிஎன்ஜி போன்ற போட்டோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கேமரா ஆங்கிரி பேர்ட் மற்றும் ப்ரூட் நின்ஜா போன்ற வீடியோ கேம்களையும் வழங்கிறது. அதோடு கூகுள் ப்ளே ஸ்டோரையும் இந்த டேப்லெட்டில் அனுபவிக்க முடியும்.

இந்த ஐ பட்டி டேப்லெட் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X