Home
Computer

ஏராளமான ஆடியோ வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும் ஐ படி டேப்லெட்

By Karthikeyan
ஏராளமான ஆடியோ வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும் ஐ படி டேப்லெட்

மொபைல் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் ஸ்னாப்டீல்.காம் என்ற இணைய தளம் இன்டக்ஸ் ஐ படி 7.2 என்று ஒரு புதிய டேப்லெட்டை விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டை ஒரு வருட உத்திரவாதத்துடன் ரூ.5,490க்கு விற்பனை செய்கிறது. இந்த டேப்லெட் குறைந்த விலையில் வந்தாலும் நிறைந்த தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக 7 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் 1 ஜிஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் எ8 கோர் எ13 ப்ராசஸர் மற்றும் 512எம்பி டிடிஆர்III ரேம் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இது அபாரமாக இயங்கும் என்று நம்பலாம். மேலும் இந்த டேப்லெட் அடோப் ப்ளாஷ் ப்ளேயர் 11ஐ சப்போர்ட் செய்கிறது.

இந்த ஐ படி 7.2 டேப்லெட் பல்வேறு மொழிகள் கொண்ட எம்பி3 பார்மட்டுகளை சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக ஆடியோ பார்மட்டுகளான எம்பி3, டபுள்யுஎம்எ, எஎசி, எஎம்ஆர் போன்றவற்றையும், வீடியோ பார்மட்டுகளான எம்பி4, எவிஐ, டபுள்யுஎம்வி, எம்கேவி, ஆர்எம், ஆர்எம்விபி, எப்எல்வி, விஒபி, எம்ஒவி போன்றவற்றையும் இபுக் பார்மட்டுகளான பிடிஎப், எச்டிஎம்எல் போன்றவற்றையும் எம்எஸ் ஆபிஸ் பார்மட்டுகளான டாக் மற்றும் எக்எல்எஸ் போன்றவற்றையும் இந்த டேப்லெட் சப்போர்ட் செய்கிறது.

இந்த டேப்லெட்டில் 3ஜி டோங்கிள் மற்றும் வைபை வசதிகளும் உள்ளன. மேலும் 0.3எம்பி முகப்புக் கேமரா இதில் உள்ளது. இதன் 4ஜிபி மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க செய்ய முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X