Home
Computer

மைக்ரோமேக்ஸ் எ110 கேன்வாஸ் 2 பேப்லெட்டுடன் மல்லுக்கட்டும் இன்டெக்ஸ் ஆக்குவா 5.0

By Karthikeyan
மைக்ரோமேக்ஸ் எ110 கேன்வாஸ் 2 பேப்லெட்டுடன் மல்லுக்கட்டும் இன்டெக்ஸ் ஆக்குவா 5.0

2012 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ், விக்கட்லீக், ஐபால் மற்றும் சின்க் போன்றவை பல நல்ல டூவல் சிம் வசதிகளைக் கொண்ட குறைந்த விலை பேப்லெட்டுகளை இந்திய மொபைல் சந்தையில் களமிறக்கி இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது இன்டக்ஸ் நிறுவனமும் ஒரு புதிய பேப்லெட்டை இந்திய மொபைல் சந்தையில் ரூ.9,999க்கு களமிறக்கி இருக்கிறது. ஆக்குவா 5.0 என்று அழைக்கப்படும் இந்த பேப்லெட் குறைந்த விலையில் வந்தாலும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வருகிறது. அதனால் இந்திய ரசிகர்களை இந்த பேப்லெட் கண்டிப்பாக கவரும் என்று நம்பலாம்.

இந்த ஆக்குவா 5.0 பேப்லெட் 5 இன்ச் அளவில் மல்டி டச் கப்பாசிட்டிவ் தொடு வசதியுடன் ஒரு டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயக்கத்தில் வரும் இந்த பேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரில் வருவதால் இது வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

கேமராவைப் பொருத்தவரை இந்த பேப்லெட் பின்புறம் எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போக்கஸ் கொண்ட 5எம்பி கேமராவையும் 1.3எம்பி முகப்புக் கேராவையும் கொண்டிருக்கிறது. 521எம்பி ரேமுடன் வரும் இந்த பேப்லெட் 4ஜிபி மெமரியுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை 32ஜிபி அளவிற்கு அதிகரிக்க முடியும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த பேப்லெட் வைபை, 3ஜி, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது. இந்த பேப்லெட்டுக்கு இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. அதோடு இந்த பேப்லெட்டில் என்கியு ஆன்டிவைரஸ், பிலிப்கார்ட், இன்டியாரயில், நிம்பஸ் மற்றும் ஸ்கைப் போன்ற எண்ணற்ற அப்ளிகேசன்களும் உள்ளன.

இந்த பேப்லெட் கருப்பு, வெள்ளி மற்றும் ஊதா ஆகிய வண்ணங்களில் மிக அழகாக இருக்கிறது. இந்த பேப்லெட் மைக்ரோமேக்ஸ் களமிறக்கிய கேன்வாஸ் 2 பேப்லெட்டுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த கேன்வாஸ் பேப்லெட் 5 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர், 8எம்பி பின்பக்க கேமரா, 0.3எம்பி முகப்புக் கேமரா, 4ஜிபி சேமிப்பு, 512எம்பி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு வசதி, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி மற்றும் வைபை போன்ற வசதிகளும் இந்த பேப்லெட்டில் இருக்கின்றன. மேலும் இந்த கேன்வாஸ் 2 பேப்லெட்டும் ரூ.9,999க்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X